வெள்ளி, 31 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. சங்கீதம் 7:10 தேவனுடைய பிள்ளைகளாக நீங்கள் இருக்கும்போது, உங்களை அவர் பாதுகாக்கிறார். நேர்மையுடனும், உண்மையுடனும் தேவனுடைய வழிகளைக் கடைப்பிடியுங்கள். அவர் தூங்காமல், உறங்காமல் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு அடைக்கலமாயும், துன்பத்தில் எப்பொழுதும் துணையாகவும் இருக்கிறார். உங்களை ஒருபொழுதும் அவர் கைவிடமாட்டார். உங்கள் தேவைகளைச் சந்திப்பார். உறுதியான நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தச் சூழ்நிலைகளை அனுமதிக்காதீர்கள். தேவன் உங்கள் கேடகமாய் இருக்கிறார். நீங்கள் தனியே இருக்கும்போதும் அவர் உங்களைப் பாதுகாப்பார். நம்பிக்கையுடன் இருங்கள், அவையே இருண்ட காலங்களில் உங்களுக்கு வழிகாட்டும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் இருதயம் நன்றியுடன் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே என் கேடகமும் என் நம்பிக்கையும் ஆனவர். உமது செட்டைகளின் கீழ் மறைத்து என்னைக் காப்பாற்றும். ஆமென்.
தேவன் உங்களுடைய கேடகமாயிருந்து உங்களைப் பாதுகாப்பார்.
“வெள்ளி, 31 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. சங்கீதம் 7:10 தேவனுடைய பிள்ளைகளாக நீங்கள் இருக்கும்போது, உங்களை அவர் பாதுகாக்கிறார். நேர்மையுடனும், உண்மையுடனும் தேவனுடைய வழிகளைக் கடைப்பிடியுங்கள். அவர் தூங்காமல், உறங்காமல் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு அடைக்கலமாயும், துன்பத்தில் எப்பொழுதும் துணையாகவும் இருக்கிறார். உங்களை ஒருபொழுதும் அவர் கைவிடமாட்டார். உங்கள் தேவைகளைச் சந்திப்பார். உறுதியான நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தச் சூழ்நிலைகளை அனுமதிக்காதீர்கள். தேவன் உங்கள் கேடகமாய் இருக்கிறார். நீங்கள் தனியே இருக்கும்போதும் அவர் உங்களைப் பாதுகாப்பார். நம்பிக்கையுடன் இருங்கள், அவையே இருண்ட காலங்களில் உங்களுக்கு வழிகாட்டும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் இருதயம் நன்றியுடன் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே என் கேடகமும் என் நம்பிக்கையும் ஆனவர். உமது செட்டைகளின் கீழ் மறைத்து என்னைக் காப்பாற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

