இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.சங்கீதம் 20:4 தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய பிதாவாகிய தேவனிடம் நாம் விரும்பும் எதையும் கேட்கச் சுதந்திரம் பெற்றிருக்கிறோம். என்றாலும், சில சமயங்களில் நாம் அவரிடம் கேட்கும் அனைத்தையும் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என்று ஆச்சரியப்படுகிறோம். வேதத்தில், நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் செவிகொடுக்கிறார் என்று பார்க்கிறோம். மேலும், அவர் தெரிந்தெடுத்த ஜனங்களாகிய இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம். தேவ சித்தத்தைப் புரிந்து கொள்ள, நாம் இயேசுவோடு ஆவியில் நெருக்கமாய் இணைந்திருக்க வேண்டும். அவருடன் அதிக நெருக்கமாய் நடக்க வேண்டும். அவருடைய சித்தப்படி நாம் கேட்கும்போதும் செய்யும்போதும் வெற்றியைக் காண்போம். ஒரு தேவை இருக்கும்போது மட்டும் நாம் தேவனைத் தேடுகிறோமா அல்லது நம் ஆவியில் அவருடன் நெருக்கமாய் இணைந்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வுலகில் உள்ள மற்ற எல்லா விஷயங்களைக் காட்டிலும் இயேசுவோடுள்ள ஐக்கியத்துக்கு நாம் முன்னுரிமை கொடுப்பது அவசியம். அவர் நம்மை வெற்றியடையச் செய்து, நம் இருதயங்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இவ்வுலகில் உள்ள மற்ற விஷயங்களைக் காட்டிலும் உம்முடனான என் ஐக்கியத்தை முக்கியப்படுத்த எனக்கு உதவி செய்யும். உமது சித்தத்திற்கேற்ப இசைவிக்கப்பட்டு உமது ஆசீர்வாதங்களை நான் அனுபவிப்பேனாக. ஆமென்.
தேவன் உங்கள் மனவிருப்பத்தைத் தந்தருள்வார்.
“இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.சங்கீதம் 20:4 தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய பிதாவாகிய தேவனிடம் நாம் விரும்பும் எதையும் கேட்கச் சுதந்திரம் பெற்றிருக்கிறோம். என்றாலும், சில சமயங்களில் நாம் அவரிடம் கேட்கும் அனைத்தையும் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என்று ஆச்சரியப்படுகிறோம். வேதத்தில், நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் செவிகொடுக்கிறார் என்று பார்க்கிறோம். மேலும், அவர் தெரிந்தெடுத்த ஜனங்களாகிய இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம். தேவ சித்தத்தைப் புரிந்து கொள்ள, நாம் இயேசுவோடு ஆவியில் நெருக்கமாய் இணைந்திருக்க வேண்டும். அவருடன் அதிக நெருக்கமாய் நடக்க வேண்டும். அவருடைய சித்தப்படி நாம் கேட்கும்போதும் செய்யும்போதும் வெற்றியைக் காண்போம். ஒரு தேவை இருக்கும்போது மட்டும் நாம் தேவனைத் தேடுகிறோமா அல்லது நம் ஆவியில் அவருடன் நெருக்கமாய் இணைந்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வுலகில் உள்ள மற்ற எல்லா விஷயங்களைக் காட்டிலும் இயேசுவோடுள்ள ஐக்கியத்துக்கு நாம் முன்னுரிமை கொடுப்பது அவசியம். அவர் நம்மை வெற்றியடையச் செய்து, நம் இருதயங்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இவ்வுலகில் உள்ள மற்ற விஷயங்களைக் காட்டிலும் உம்முடனான என் ஐக்கியத்தை முக்கியப்படுத்த எனக்கு உதவி செய்யும். உமது சித்தத்திற்கேற்ப இசைவிக்கப்பட்டு உமது ஆசீர்வாதங்களை நான் அனுபவிப்பேனாக. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

