← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களைக் குணமாக்குவார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களைக் குணமாக்குவார்.

“வெள்ளி, 10 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் யாத்திராகமம் 15:26 நீண்ட காலமாய் மருந்து உட்கொண்டிருப்பதால் சோர்வாய் காணப்படுகிறீர்களா?மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத வியாதியினால் கஷ்டப்படுகிறீர்களா?மனநலக் குறைபாடுள்ள குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் உங்களுடன் இருக்கிறார்களா?மருத்துவ பக்க விளைவுகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?நீங்கள் நிலையற்ற மனதோடு உணர்ச்சிவசப்பட்டுக் காணப்படுகிறீர்களா? "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" என்று அவர் சொல்லியிருக்கிறபடியே, மருந்துகளை மட்டுமே நம்பியிருக்காமல், சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகரான நம்முடைய தேவனை ஏன் நம்பக்கூடாது? ஆம், சர்வவல்லவரின் செட்டை யின் கீழ் ஆரோக்கியம் உண்டு. அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. சகலவித நோய்களிலிருந்தும் வியாதிகளினின்றும் உங்களை விடுவிக்க இயேசு ஏற்கனவே சிலுவையில் விலை கொடுத்துவிட்டார். அவருடைய குணமாக்கும் வல்லமையின்மேல் முழு நம்பிக்கையுடன் அவரிடம் நீங்கள் வந்தால், அவர் உங்களைக் குணமாக்குவார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது சுகமாக்கும் தொடுதலைத் தேடி உம்மிடம் வருகிறேன். தயவுசெய்து என்னை குணமாக்கும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளி, 10 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் யாத்திராகமம் 15:26 நீண்ட காலமாய் மருந்து உட்கொண்டிருப்பதால் சோர்வாய் காணப்படுகிறீர்களா?மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத வியாதியினால் கஷ்டப்படுகிறீர்களா?மனநலக் குறைபாடுள்ள குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் உங்களுடன் இருக்கிறார்களா?மருத்துவ பக்க விளைவுகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?நீங்கள் நிலையற்ற மனதோடு உணர்ச்சிவசப்பட்டுக் காணப்படுகிறீர்களா? “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்று அவர் சொல்லியிருக்கிறபடியே, மருந்துகளை மட்டுமே நம்பியிருக்காமல், சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகரான நம்முடைய தேவனை ஏன் நம்பக்கூடாது? ஆம், சர்வவல்லவரின் செட்டை யின் கீழ் ஆரோக்கியம் உண்டு. அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. சகலவித நோய்களிலிருந்தும் வியாதிகளினின்றும் உங்களை விடுவிக்க இயேசு ஏற்கனவே சிலுவையில் விலை கொடுத்துவிட்டார். அவருடைய குணமாக்கும் வல்லமையின்மேல் முழு நம்பிக்கையுடன் அவரிடம் நீங்கள் வந்தால், அவர் உங்களைக் குணமாக்குவார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது சுகமாக்கும் தொடுதலைத் தேடி உம்மிடம் வருகிறேன். தயவுசெய்து என்னை குணமாக்கும். ஆமென்.