புதன், 8 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது.1 சாமுவேல் 2:1 உங்கள் கோழைத்தனத்தால் உங்கள் வாழ்க்கையில் தவறவிட்ட வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? உங்கள் பயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்று குழம்பிப் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது நமக்குப் பலத்தைத் தருகிறது என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. இது எளியதும் சக்திவாய்ந்ததுமானதோர் தீர்வு, இல்லையா? மகிழ்ச்சியாய் இருப்பதன் இரகசியம் என்னவென்றால், இயேசுவின்மீது அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருப்பதும், உங்கள் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளையும் அவர் கட்டுப்படுத்துகிறார் என்று நம்புவதுமாகும். ஆம்! உங்கள் காலங்கள் அவரது கரத்தில் இருக்கின்றன. உங்கள் வாழ்க்கைக்கென்று அவர் திட்டமிட்டுள்ள யாவும் ஒருபொழுதும் தோற்றுப்போகாது. உங்கள் எதிர்காலத்திற்கான அவர் திட்டங்கள் சமாதானமும், நம்பிக்கையும் நிறைந்தவையாகும். இந்த விசுவாசம் உங்களை விடுவித்து, உங்கள் வாழ்வின் சகலவிதமான பலன்களையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்ள உதவி செய்யும் . நீங்கள் முழுமனதோடு தேவனுக்குள் களிகூரும்போது, உங்கள் ஆவியிலும் மனதிலும் ஒரு மிகப்பெரிய வல்லமையை அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
கர்த்தருக்குள் களிகூருங்கள்.
“புதன், 8 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது.1 சாமுவேல் 2:1 உங்கள் கோழைத்தனத்தால் உங்கள் வாழ்க்கையில் தவறவிட்ட வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? உங்கள் பயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்று குழம்பிப் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது நமக்குப் பலத்தைத் தருகிறது என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. இது எளியதும் சக்திவாய்ந்ததுமானதோர் தீர்வு, இல்லையா? மகிழ்ச்சியாய் இருப்பதன் இரகசியம் என்னவென்றால், இயேசுவின்மீது அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருப்பதும், உங்கள் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளையும் அவர் கட்டுப்படுத்துகிறார் என்று நம்புவதுமாகும். ஆம்! உங்கள் காலங்கள் அவரது கரத்தில் இருக்கின்றன. உங்கள் வாழ்க்கைக்கென்று அவர் திட்டமிட்டுள்ள யாவும் ஒருபொழுதும் தோற்றுப்போகாது. உங்கள் எதிர்காலத்திற்கான அவர் திட்டங்கள் சமாதானமும், நம்பிக்கையும் நிறைந்தவையாகும். இந்த விசுவாசம் உங்களை விடுவித்து, உங்கள் வாழ்வின் சகலவிதமான பலன்களையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்ள உதவி செய்யும் . நீங்கள் முழுமனதோடு தேவனுக்குள் களிகூரும்போது, உங்கள் ஆவியிலும் மனதிலும் ஒரு மிகப்பெரிய வல்லமையை அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

