← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் தேவன் பரிசுத்தராயிருப்பதால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் தேவன் பரிசுத்தராயிருப்பதால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்

“வியாழன், 2 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். லேவியராகமம் 19:2 * பரிசுத்தம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கிய பிரதிபலிப்பாகும்.* நம்முடைய கர்த்தர் பரிசுத்தர், அதுபோல அவருடையப் பிள்ளைளும் பரிசுத்தமாய் இருக்கும்படிக் கட்டளையிட்டிருக்கிறார்.* பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது.* பரிசுத்தமற்ற எதுவும் தேவனுடன் வாழ முடியாது, ஏனெனில் அவர் பரிசுத்தராய் இருக்கிறார். * பரிசுத்தமற்றதை, மனிதனால் சிகிட்சை செய்து சரிப்படுத்த முடியாது என்பது தேவனுக்குத் தெரியும்.* அதனால்தான் இயேசு வந்து, தம்மை விசுவாசிக்கும் யாவரையும் சுத்திகரிக்கத் தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தினார்.* தேவன் தம் பிள்ளைகளைப் பரிசுத்தத்தில் நிலைநிறுத்தப் பரிசுத்த ஆவியையும் கொடுத்தார். * நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டீர்களா?* தேவ பிள்ளையாக, நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறீர்களா?* இல்லையெனில், சிந்தனையிலும் செயலிலும் பரிசுத்த வாழ்க்கை வாழ அனைத்துத் திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.* நீங்கள் தேவ கிருபையையும் உதவியையும் நாடினால், அவர், நிச்சயமாய் நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ உதவி செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது இரத்தத்தால் என்னைக் கழுவி, என்னுடைய எல்லா அக்கிரமங்களையும் நீக்கி என்னைச் சுத்திகரியும். பரிசுத்த வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 2 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். லேவியராகமம் 19:2 * பரிசுத்தம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கிய பிரதிபலிப்பாகும்.* நம்முடைய கர்த்தர் பரிசுத்தர், அதுபோல அவருடையப் பிள்ளைளும் பரிசுத்தமாய் இருக்கும்படிக் கட்டளையிட்டிருக்கிறார்.* பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது.* பரிசுத்தமற்ற எதுவும் தேவனுடன் வாழ முடியாது, ஏனெனில் அவர் பரிசுத்தராய் இருக்கிறார். * பரிசுத்தமற்றதை, மனிதனால் சிகிட்சை செய்து சரிப்படுத்த முடியாது என்பது தேவனுக்குத் தெரியும்.* அதனால்தான் இயேசு வந்து, தம்மை விசுவாசிக்கும் யாவரையும் சுத்திகரிக்கத் தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தினார்.* தேவன் தம் பிள்ளைகளைப் பரிசுத்தத்தில் நிலைநிறுத்தப் பரிசுத்த ஆவியையும் கொடுத்தார். * நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டீர்களா?* தேவ பிள்ளையாக, நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறீர்களா?* இல்லையெனில், சிந்தனையிலும் செயலிலும் பரிசுத்த வாழ்க்கை வாழ அனைத்துத் திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.* நீங்கள் தேவ கிருபையையும் உதவியையும் நாடினால், அவர், நிச்சயமாய் நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ உதவி செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது இரத்தத்தால் என்னைக் கழுவி, என்னுடைய எல்லா அக்கிரமங்களையும் நீக்கி என்னைச் சுத்திகரியும். பரிசுத்த வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.