திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் ஏசாயா 49:3 அன்பு தேவ பிள்ளையே, நீங்கள், இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்றீர்களா? உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஏதாவது நல்லது நடக்குமா என்று நீங்கள் வேதனைப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் அண்டசராசரங்களின் தேவன் உங்கள் அன்புத் தகப்பனாய் இருக்கிறார். நீங்கள் தேவனுக்கு மிகவும் விசேஷமானவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வாழ்க்கையில் அவர் உங்களைத் தம்முடைய மரியாதைக்குரிய பாத்திரமாய்த் தேர்ந்தெடுத்துள்ளார். ஆகையால், அவருடைய சித்தத்தைச் செய்வதில் உறுதியாயிருங்கள். அவர் உங்கள் வாழ்க்கையில் தம்முடைய மகிமையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார். அவர் உங்கள் வாழ்வை மாற்றுவார். எனவே, அவருடைய வல்லமையையும், திட்டங்களையும் நம்புங்கள். அவர் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுக்கு ஓர் சிறந்த சாட்சியாகவும், உதாரணமாகவும் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்நாள் முழுவதையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். உமது மகிமையையும், மகத்துவத்தையும் என் வாழ்விலும், என் வாழ்வின் மூலமும் வெளிப்படுத்தும். ஆமென்.
தேவன் தம் மகிமையை உங்களில் வெளிப்படுத்துவார்.
“திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் ஏசாயா 49:3 அன்பு தேவ பிள்ளையே, நீங்கள், இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்றீர்களா? உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஏதாவது நல்லது நடக்குமா என்று நீங்கள் வேதனைப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் அண்டசராசரங்களின் தேவன் உங்கள் அன்புத் தகப்பனாய் இருக்கிறார். நீங்கள் தேவனுக்கு மிகவும் விசேஷமானவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வாழ்க்கையில் அவர் உங்களைத் தம்முடைய மரியாதைக்குரிய பாத்திரமாய்த் தேர்ந்தெடுத்துள்ளார். ஆகையால், அவருடைய சித்தத்தைச் செய்வதில் உறுதியாயிருங்கள். அவர் உங்கள் வாழ்க்கையில் தம்முடைய மகிமையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார். அவர் உங்கள் வாழ்வை மாற்றுவார். எனவே, அவருடைய வல்லமையையும், திட்டங்களையும் நம்புங்கள். அவர் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுக்கு ஓர் சிறந்த சாட்சியாகவும், உதாரணமாகவும் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்நாள் முழுவதையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். உமது மகிமையையும், மகத்துவத்தையும் என் வாழ்விலும், என் வாழ்வின் மூலமும் வெளிப்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

