செவ்வாய், 22 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.யோவான் 13:34 உங்கள் அயலவர்கள், சகப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினரை நேசிக்கிறீர்களா? பிறரை நேசிக்கத் தேவன் நமக்கு கட்டளையிடுகிறார். நாம் பரிசுத்தவான்களாய் இருந்ததினால் அல்ல, பாவிகளாய் இருந்தபோதும் தேவன் நம்மீது அன்பு காட்டினார். இதுதான் மெய்யான அன்பு. இந்தப் பரிபூரண தெய்வீக அன்பை நீங்கள் அனுபவித்து உணர்ந்ததுபோல், உண்மையான அன்பு என்றால் என்ன அர்த்தம் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தின்படி, தாங்கள் காண்கிற சகோதர சகோதரிகளிடத்தில் அன்புகூறாதவர், தாங்கள் காணாத தேவனிடத்தில் அன்புகூற முடியாது. உண்மையான அன்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதும் செயல்களை உள்ளடக்கியதுமாகும். பழைய பழமொழி சொல்வது போல், செயல்கள் வார்த்தைகளைச் விட சத்தமாய்ப் பேசுகின்றன. மற்றவர்களை மதித்து, அன்புகூர்ந்து சேவை செய்வது தேவன் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுவாய்க் காண்பிக்கிறது. தேவன் உங்களில் அன்பாயிருந்தது போல் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம் தெய்வீக அன்பைச் செயல்களின் மூலம் வெளிப்படுத்த எனக்குக் கிருபை புரியும். ஆமென்.
தேவன் உங்களில் அன்பாயிருப்பது போல் நீங்களும் ஒருவரிலொருவர்...
“செவ்வாய், 22 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.யோவான் 13:34 உங்கள் அயலவர்கள், சகப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினரை நேசிக்கிறீர்களா? பிறரை நேசிக்கத் தேவன் நமக்கு கட்டளையிடுகிறார். நாம் பரிசுத்தவான்களாய் இருந்ததினால் அல்ல, பாவிகளாய் இருந்தபோதும் தேவன் நம்மீது அன்பு காட்டினார். இதுதான் மெய்யான அன்பு. இந்தப் பரிபூரண தெய்வீக அன்பை நீங்கள் அனுபவித்து உணர்ந்ததுபோல், உண்மையான அன்பு என்றால் என்ன அர்த்தம் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தின்படி, தாங்கள் காண்கிற சகோதர சகோதரிகளிடத்தில் அன்புகூறாதவர், தாங்கள் காணாத தேவனிடத்தில் அன்புகூற முடியாது. உண்மையான அன்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதும் செயல்களை உள்ளடக்கியதுமாகும். பழைய பழமொழி சொல்வது போல், செயல்கள் வார்த்தைகளைச் விட சத்தமாய்ப் பேசுகின்றன. மற்றவர்களை மதித்து, அன்புகூர்ந்து சேவை செய்வது தேவன் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுவாய்க் காண்பிக்கிறது. தேவன் உங்களில் அன்பாயிருந்தது போல் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம் தெய்வீக அன்பைச் செயல்களின் மூலம் வெளிப்படுத்த எனக்குக் கிருபை புரியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

