புதன்கிழமை, 13 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10 அன்பு தேவ பிள்ளையே,தேவனோடு ஐக்கியமாயிருப்பதற்கு சுத்த இருதயமும், நிலைவரமான ஆவியும் தேவை. தேவன் உங்கள் இருதயத்தைப் பார்க்கிறார். உங்கள் நோக்கங்கள், முயற்சிகள் மற்றும் ஆசைகள் உட்பட உங்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்திருக்கிறார். எனவே, உங்கள் உள்ளார்ந்த எண்ணங்களைப் பற்றிக் கவனமாயிருந்து, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவ வழிகாட்டுதலையும், நடத்துதலையும் தேடுவது அவசியம். நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் போராடினால், ஒரே தீர்வு இயேசு மட்டுமே. அவர் உங்கள் பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் உங்களைச் சுத்திகரிக்க வல்லவராய் இருக்கிறார். தேவனின் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பைப் பெற, நீங்கள் உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, உங்கள் தவறுக்காக மனந்திரும்பி, பாவ வழிகளை விட்டு விலக வேண்டும். அப்பொழுதுதான் தேவன் உங்களுக்குள் நிலைவரமான ஆவியைப் புதுப்பித்து, அவருடனான உங்கள் உறவை மீட்டெடுக்க முடியும். உங்கள் சொந்த முயற்சியால் நீங்கள் தேவனின் மன்னிப்பையோ அல்லது அவருடைய தயவையோ பெற முடியாது. மாறாக, இது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் வரும் ஓர் இலவசப் பரிசு. நீங்கள் அவரை உங்கள் இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசிப்பதன் மூலம், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவனுடன் ஒப்புரவாகிவிட்டீர்கள் என்று நீங்கள் நிச்சயமாய் நம்பலாம். இந்த உறுதியானது உங்களுக்கு சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், குற்ற உணர்ச்சியற்ற வாழ்க்கை வாழ்வதற்கான சுதந்திரத்தையும் அளிக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எனக்குள் நிலைவரமான ஆவியைப் புதுப்பித்து, உம்முடனான என் உறவை மீட்டெடுத்தருளும். ஆமென்.
நிலைவரமான ஆவியைத் தேவன் உங்களில் புதுப்பிப்பார்
“புதன்கிழமை, 13 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10 அன்பு தேவ பிள்ளையே,தேவனோடு ஐக்கியமாயிருப்பதற்கு சுத்த இருதயமும், நிலைவரமான ஆவியும் தேவை. தேவன் உங்கள் இருதயத்தைப் பார்க்கிறார். உங்கள் நோக்கங்கள், முயற்சிகள் மற்றும் ஆசைகள் உட்பட உங்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்திருக்கிறார். எனவே, உங்கள் உள்ளார்ந்த எண்ணங்களைப் பற்றிக் கவனமாயிருந்து, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவ வழிகாட்டுதலையும், நடத்துதலையும் தேடுவது அவசியம். நீங்கள் குற்ற உணர்ச்சியுடன் போராடினால், ஒரே தீர்வு இயேசு மட்டுமே. அவர் உங்கள் பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் உங்களைச் சுத்திகரிக்க வல்லவராய் இருக்கிறார். தேவனின் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பைப் பெற, நீங்கள் உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, உங்கள் தவறுக்காக மனந்திரும்பி, பாவ வழிகளை விட்டு விலக வேண்டும். அப்பொழுதுதான் தேவன் உங்களுக்குள் நிலைவரமான ஆவியைப் புதுப்பித்து, அவருடனான உங்கள் உறவை மீட்டெடுக்க முடியும். உங்கள் சொந்த முயற்சியால் நீங்கள் தேவனின் மன்னிப்பையோ அல்லது அவருடைய தயவையோ பெற முடியாது. மாறாக, இது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் வரும் ஓர் இலவசப் பரிசு. நீங்கள் அவரை உங்கள் இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசிப்பதன் மூலம், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவனுடன் ஒப்புரவாகிவிட்டீர்கள் என்று நீங்கள் நிச்சயமாய் நம்பலாம். இந்த உறுதியானது உங்களுக்கு சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், குற்ற உணர்ச்சியற்ற வாழ்க்கை வாழ்வதற்கான சுதந்திரத்தையும் அளிக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எனக்குள் நிலைவரமான ஆவியைப் புதுப்பித்து, உம்முடனான என் உறவை மீட்டெடுத்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

