புதன், 1 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.யாத்திராகமம் 23:25 உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, எதிர்கால முன்னேற்றங்களின் கணிக்க முடியாத தன்மை மற்றும் போர் பற்றிய பயம் ஆகியவற்றின் காரணமாக, வேலைப் பாதுகாப்பு அல்லது வணிக இலாபத்திற்கு உத்தரவாதம் இல்லை. நீங்கள் இந்தச் சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உரிய முன்னேற்பாடுகளைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? மேற்சொல்லிய சூழ்நிலைகள் மனித வாழ்க்கையின் இருப்பை அச்சுறுத்தினாலும், நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும், தேவன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். நீங்கள் நினைப்பதற்கும் மேலாக, உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் சுகம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை தருவதாக தேவன் வாக்குப் பண்ணி அதில் உறுதியாயிருக்கிறார். இயேசுவை நம்புங்கள், அவருடனான உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு, அவருடைய சத்தத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் மிகுந்த உணர்வுடையோராய் இருங்கள். அவருடைய வார்த்தைகளுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிவதில் உறுதியாக இருங்கள், அப்பொழுது அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, நோயிலிருந்து என்னைப் பாதுகாப்பதாக நீர் அளித்திருக்கும் வாக்குறுதிக்கு நன்றி செலுத்துகிறேன். கீழ்ப்படிதலோடு இருக்கவும், உமது பாதுகாப்புக் கரத்தின் கீழ் இருக்கவும் எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.
தேவன் உங்களைப் பராமரித்துப் பாதுகாப்பார்.
“புதன், 1 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.யாத்திராகமம் 23:25 உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, எதிர்கால முன்னேற்றங்களின் கணிக்க முடியாத தன்மை மற்றும் போர் பற்றிய பயம் ஆகியவற்றின் காரணமாக, வேலைப் பாதுகாப்பு அல்லது வணிக இலாபத்திற்கு உத்தரவாதம் இல்லை. நீங்கள் இந்தச் சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உரிய முன்னேற்பாடுகளைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? மேற்சொல்லிய சூழ்நிலைகள் மனித வாழ்க்கையின் இருப்பை அச்சுறுத்தினாலும், நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும், தேவன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். நீங்கள் நினைப்பதற்கும் மேலாக, உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் சுகம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை தருவதாக தேவன் வாக்குப் பண்ணி அதில் உறுதியாயிருக்கிறார். இயேசுவை நம்புங்கள், அவருடனான உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு, அவருடைய சத்தத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் மிகுந்த உணர்வுடையோராய் இருங்கள். அவருடைய வார்த்தைகளுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிவதில் உறுதியாக இருங்கள், அப்பொழுது அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, நோயிலிருந்து என்னைப் பாதுகாப்பதாக நீர் அளித்திருக்கும் வாக்குறுதிக்கு நன்றி செலுத்துகிறேன். கீழ்ப்படிதலோடு இருக்கவும், உமது பாதுகாப்புக் கரத்தின் கீழ் இருக்கவும் எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

