← செய்திகளுக்குத் திரும்பு
ஆழமான காரியங்களைத் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
படத்தைப் பதிவிறக்கு

ஆழமான காரியங்களைத் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

“ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். யோபு 12:22 உங்கள் தற்போதைய வேலை அல்லது அந்தஸ்தை அசட்டையாய் எடுத்துக்கொள்கிறீர்களா? நீங்கள் உங்களை அசைக்க முடியாதவராகக் கருதுகிறீர்களா? உங்கள் வாழ்க்கை நன்கு பாதுகாக்கப்பட்டு மறைவாய், ரகசியமாய் இருக்கிறது என்றும், உங்கள் தவறுகள் யாருக்கும் தெரியாது என்றும் நீங்கள் எண்ணுகிறீர்களா? தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒன்றும் மறைக்கப்படவில்லை. உங்கள் மறைவான வாழ்க்கையின் ரகசியங்களை வெளிப்படுத்தி அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அவரால் முடியும். எனவே, உங்கள் செயல்களில் கவனமாகவும் விழிப்புடனும் இருங்கள். மேலும், நீங்கள் வாழ்க்கையின் துயரத்தில் சிக்கி, உங்கள் குழப்பத்திலிருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்தால், இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் உங்கள் எல்லாச் சூழ்நிலைகளையும் தலைகீழாய் மாற்ற முடியும். அவரைத் தேடுங்கள்; அவர் உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், இரகசியங்களையும் வெளிப்படுத்துவார். தாழ்மையான இருதயத்துடன் இயேசுவைப் பின்பற்றுங்கள்; உங்கள் குழப்பத்திலிருந்து மீள்வதற்கு அவர் ஒரு வழியைக் காட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து மறைவான காரியங்களை வெளிப்படுத்தி, வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றிய ஆழமான வெளிப்பாடுகளை எனக்குத் தந்தருளும். என் வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு, சமாதானமாய் நடக்க எனக்கு உதவிச் செய்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். யோபு 12:22 உங்கள் தற்போதைய வேலை அல்லது அந்தஸ்தை அசட்டையாய் எடுத்துக்கொள்கிறீர்களா? நீங்கள் உங்களை அசைக்க முடியாதவராகக் கருதுகிறீர்களா? உங்கள் வாழ்க்கை நன்கு பாதுகாக்கப்பட்டு மறைவாய், ரகசியமாய் இருக்கிறது என்றும், உங்கள் தவறுகள் யாருக்கும் தெரியாது என்றும் நீங்கள் எண்ணுகிறீர்களா? தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒன்றும் மறைக்கப்படவில்லை. உங்கள் மறைவான வாழ்க்கையின் ரகசியங்களை வெளிப்படுத்தி அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அவரால் முடியும். எனவே, உங்கள் செயல்களில் கவனமாகவும் விழிப்புடனும் இருங்கள். மேலும், நீங்கள் வாழ்க்கையின் துயரத்தில் சிக்கி, உங்கள் குழப்பத்திலிருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்தால், இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் உங்கள் எல்லாச் சூழ்நிலைகளையும் தலைகீழாய் மாற்ற முடியும். அவரைத் தேடுங்கள்; அவர் உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், இரகசியங்களையும் வெளிப்படுத்துவார். தாழ்மையான இருதயத்துடன் இயேசுவைப் பின்பற்றுங்கள்; உங்கள் குழப்பத்திலிருந்து மீள்வதற்கு அவர் ஒரு வழியைக் காட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து மறைவான காரியங்களை வெளிப்படுத்தி, வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றிய ஆழமான வெளிப்பாடுகளை எனக்குத் தந்தருளும். என் வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு, சமாதானமாய் நடக்க எனக்கு உதவிச் செய்தருளும். ஆமென்.