சனிக்கிழமை, 30 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும். சங்கீதம் 19:13 தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். நாம் பெருமிதத்தால் நிரப்பப்படும்போது கர்த்தருடைய வார்த்தைக்கு உணர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறோம். நூற்றுக்கணக்கான செய்திகளைக் கேட்டாலும், பெருமை நம்மை கர்த்தரின் வார்த்தைகளுக்கு உணர்ச்சியற்றவர்களாக மாற்றி விடுகிறது. அப்பொழுது நாம் பொறுமையற்றவர்களாகவும், சகிப்புத்தன்மையற்றவர்களாகவும், திமிர்பிடித்தவர்களாகவும் ஆகிவிடுகிறோம், மேலும் நமது தவறுகளுக்கு நம் கண்கள் குருடாகி விடுகின்றன. நாம் எப்பொழுதும் சரியானவர்கள் என்று நினைத்து, மற்றவர்கள் செய்வது தவறு என்று நாம் விமர்சிக்க ஆரம்பிக்கிறோம். ஒரு பெருமைமிக்க நபர் தனது தவறுகளுக்காக ஒருபொழுதும் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால், அது இறுதியில் அழிவுக்கு வழிவகுத்து விடுகிறது. லூசிபர் தனது பெருமையின் காரணமாக வானத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேபுகாத்நேச்சார் ராஜா தனது பெருமையின் காரணமாக தனது ராஜ்யத்தை இழந்தார், மேலும் ஏரோது ராஜா தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதடியினால், உடனே கர்த்தருடையத் தூதன் அவனை அடித்தான். பெருமையுள்ளவர்களை கர்த்தர் வெறுக்கிறார், ஆனால் தாழ்மையானவர்களுக்கு கிருபை அளிக்கிறார். தாழ்மையுடன் இருப்பதன் மூலம், நீங்கள் இன்று உங்கள் பெருமையை அகற்றி, கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாய் வாழ ஆரம்பியுங்கள். நாம் தாழ்மையுடன் இருந்தால் மட்டுமே கர்த்தரின் கிருபையைப் பெற்று பாவத்திலிருந்து விடுபட முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லா நேரங்களிலும் தாழ்மையுடன் இருக்கவும், பெருமையின் பாவங்களைத் தவிர்க்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
பெருமையின் பாவங்களிலிருந்து விலகி இருங்கள்.
“சனிக்கிழமை, 30 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும். சங்கீதம் 19:13 தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். நாம் பெருமிதத்தால் நிரப்பப்படும்போது கர்த்தருடைய வார்த்தைக்கு உணர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறோம். நூற்றுக்கணக்கான செய்திகளைக் கேட்டாலும், பெருமை நம்மை கர்த்தரின் வார்த்தைகளுக்கு உணர்ச்சியற்றவர்களாக மாற்றி விடுகிறது. அப்பொழுது நாம் பொறுமையற்றவர்களாகவும், சகிப்புத்தன்மையற்றவர்களாகவும், திமிர்பிடித்தவர்களாகவும் ஆகிவிடுகிறோம், மேலும் நமது தவறுகளுக்கு நம் கண்கள் குருடாகி விடுகின்றன. நாம் எப்பொழுதும் சரியானவர்கள் என்று நினைத்து, மற்றவர்கள் செய்வது தவறு என்று நாம் விமர்சிக்க ஆரம்பிக்கிறோம். ஒரு பெருமைமிக்க நபர் தனது தவறுகளுக்காக ஒருபொழுதும் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால், அது இறுதியில் அழிவுக்கு வழிவகுத்து விடுகிறது. லூசிபர் தனது பெருமையின் காரணமாக வானத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேபுகாத்நேச்சார் ராஜா தனது பெருமையின் காரணமாக தனது ராஜ்யத்தை இழந்தார், மேலும் ஏரோது ராஜா தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதடியினால், உடனே கர்த்தருடையத் தூதன் அவனை அடித்தான். பெருமையுள்ளவர்களை கர்த்தர் வெறுக்கிறார், ஆனால் தாழ்மையானவர்களுக்கு கிருபை அளிக்கிறார். தாழ்மையுடன் இருப்பதன் மூலம், நீங்கள் இன்று உங்கள் பெருமையை அகற்றி, கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாய் வாழ ஆரம்பியுங்கள். நாம் தாழ்மையுடன் இருந்தால் மட்டுமே கர்த்தரின் கிருபையைப் பெற்று பாவத்திலிருந்து விடுபட முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லா நேரங்களிலும் தாழ்மையுடன் இருக்கவும், பெருமையின் பாவங்களைத் தவிர்க்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

