சனிக்கிழமை, 16 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். நீதிமொழிகள் 11:26 * நீங்கள் பிறருக்கு எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியம்.* உங்கள் ஆசீர்வாதங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் நீங்கள் தாராள குணமாயிருக்கிறீர்களா?* உங்கள் ஆசீர்வாதங்களைப் பதுக்கி வைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், தேவைப்படுவோர்க்கு உதவத் தேவன் கொடுத்த வளங்களைப் பயன்படுத்துவதில் தாராளமும் உண்மையுமாய் இருங்கள். * மற்றவர்களை ஆசீர்வதிப்பதிலும், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இரக்கம் காட்டி, உதவி செய்வதிலும் நீங்கள் கவனம் செலுத்தும்போது, தேவனிடமிருந்து இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். * தேவைப்படுவோருடன் உங்கள் அன்பையும் இரக்கத்தையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், கொடுத்துப் பெற்றுக்கொள்ளும் ஓர் அழகான சுழற்சியில் நீங்கள் பங்குப் பெறுகிறீர்கள்.* எனவே மற்றவர்களை அணுகவும், உதவவும் பயப்பட வேண்டாம் - அது அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களைத் தேவனிடம் நெருங்கிச் செல்லவும், அவருடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகுக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவைப்படும் நேரங்களில் மற்றவர்களை ஆசீர்வதிப்பதில் தாராளக் குணத்தோடு இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
தேவையின் நேரத்தில் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருங்கள்.
“சனிக்கிழமை, 16 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். நீதிமொழிகள் 11:26 * நீங்கள் பிறருக்கு எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியம்.* உங்கள் ஆசீர்வாதங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் நீங்கள் தாராள குணமாயிருக்கிறீர்களா?* உங்கள் ஆசீர்வாதங்களைப் பதுக்கி வைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், தேவைப்படுவோர்க்கு உதவத் தேவன் கொடுத்த வளங்களைப் பயன்படுத்துவதில் தாராளமும் உண்மையுமாய் இருங்கள். * மற்றவர்களை ஆசீர்வதிப்பதிலும், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இரக்கம் காட்டி, உதவி செய்வதிலும் நீங்கள் கவனம் செலுத்தும்போது, தேவனிடமிருந்து இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். * தேவைப்படுவோருடன் உங்கள் அன்பையும் இரக்கத்தையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், கொடுத்துப் பெற்றுக்கொள்ளும் ஓர் அழகான சுழற்சியில் நீங்கள் பங்குப் பெறுகிறீர்கள்.* எனவே மற்றவர்களை அணுகவும், உதவவும் பயப்பட வேண்டாம் - அது அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களைத் தேவனிடம் நெருங்கிச் செல்லவும், அவருடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகுக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவைப்படும் நேரங்களில் மற்றவர்களை ஆசீர்வதிப்பதில் தாராளக் குணத்தோடு இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

