← செய்திகளுக்குத் திரும்பு
பிறரிடம் தயாளகுணம் காட்டுகிறவராய் இருங்கள், உங்கள் பிள்ளைகள் ஆசீர்வாதமாய் இருப்பார்கள்.
படத்தைப் பதிவிறக்கு

பிறரிடம் தயாளகுணம் காட்டுகிறவராய் இருங்கள், உங்கள் பிள்ளைகள்...

“செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.சங்கீதம் 37:26 * தயாளகுணம் உள்ளோரைத் தேவன் கனம்பண்ணுகிறார்.* தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் மூலம் அவர் தம் தயாளகுணத்தை வெளிப்படுத்தினார்.* அவர் நம்மை அளவில்லாமல் நேசித்து, அவருடைய பிள்ளைகளும் அப்படியே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். * பிறருக்குக் கொடுப்பதிலும், உதவி செய்வதிலும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.* தேவன் தயாளகுணத்தோடு உங்களிடம் இருக்கிறது போலவே நீங்களும் பிறரிடம் தயாளமாய் இருங்கள்.* மிகச்சிறிய இரக்கச் செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் செயல்களின் வல்லமையை ஒருபொழுதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். * கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.* பிறர் உங்களுக்கு எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே அவர்களுக்கும் செய்யுங்கள்.* முடிந்தவரை பலருக்கு ஆசீர்வாதமாய் இருங்கள்.* உங்கள் பிள்ளைகளும் ஆசீர்வாதமாயிருப்பார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மைப் போல் தயாள குணத்தோடு இருக்க எனக்கு உதவிச் செய்யும். என் சந்ததியை ஆசீர்வதித்து, அவர்கள் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.சங்கீதம் 37:26 * தயாளகுணம் உள்ளோரைத் தேவன் கனம்பண்ணுகிறார்.* தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் மூலம் அவர் தம் தயாளகுணத்தை வெளிப்படுத்தினார்.* அவர் நம்மை அளவில்லாமல் நேசித்து, அவருடைய பிள்ளைகளும் அப்படியே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். * பிறருக்குக் கொடுப்பதிலும், உதவி செய்வதிலும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.* தேவன் தயாளகுணத்தோடு உங்களிடம் இருக்கிறது போலவே நீங்களும் பிறரிடம் தயாளமாய் இருங்கள்.* மிகச்சிறிய இரக்கச் செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் செயல்களின் வல்லமையை ஒருபொழுதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். * கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.* பிறர் உங்களுக்கு எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே அவர்களுக்கும் செய்யுங்கள்.* முடிந்தவரை பலருக்கு ஆசீர்வாதமாய் இருங்கள்.* உங்கள் பிள்ளைகளும் ஆசீர்வாதமாயிருப்பார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மைப் போல் தயாள குணத்தோடு இருக்க எனக்கு உதவிச் செய்யும். என் சந்ததியை ஆசீர்வதித்து, அவர்கள் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படிச் செய்யும். ஆமென்.