← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே நம்மை மறுபடியும்...

“தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 1 பேதுரு 1:3 இயேசுவின் உயிர்த்தெழுதல் மரணத்தை தோற்கடித்து, அதன் கட்டுகளை உடைத்தது. மரணம் இந்த உலகில் வாழ்வின் முடிவாக இருந்தாலும், அது உண்மையில் இன்னொரு வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இயேசு மரணத்தை வென்று நித்திய ஜீவனுக்கு வழி திறந்தார். இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதன் மூலம், இந்த ஜீவனுள்ள நம்பிக்கையின் வாழ்வில் மறுபடியும் பிறக்கிற அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். என்றென்றும் அவருடன் இருக்க ஒரு நாள் நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுவீர்கள். ஆம், என்ன ஒரு நம்பமுடியாத நம்பிக்கை நமக்கு இருக்கிறது! இந்த நம்பிக்கையின் செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும், அவர்கள் இரட்சிப்பைப் பெற உதவிச் செய்வதும், மரணம் மற்றும் பிசாசின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் ஒவ்வொரு தேவனுடையப் பிள்ளையின் பணியாகும். நீங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் இந்த நாளில், கர்த்தருக்காக ஆத்துமாவைக் காப்பாற்றுபவராக அல்லது ஆத்துமாவை வெல்லுபவராக இந்த மாபெரும் பணிக்கு உங்களைத் தயார்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இரட்சிப்பின் செய்தியை முடிந்தவரை பலருடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 1 பேதுரு 1:3 இயேசுவின் உயிர்த்தெழுதல் மரணத்தை தோற்கடித்து, அதன் கட்டுகளை உடைத்தது. மரணம் இந்த உலகில் வாழ்வின் முடிவாக இருந்தாலும், அது உண்மையில் இன்னொரு வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இயேசு மரணத்தை வென்று நித்திய ஜீவனுக்கு வழி திறந்தார். இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதன் மூலம், இந்த ஜீவனுள்ள நம்பிக்கையின் வாழ்வில் மறுபடியும் பிறக்கிற அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். என்றென்றும் அவருடன் இருக்க ஒரு நாள் நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுவீர்கள். ஆம், என்ன ஒரு நம்பமுடியாத நம்பிக்கை நமக்கு இருக்கிறது! இந்த நம்பிக்கையின் செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும், அவர்கள் இரட்சிப்பைப் பெற உதவிச் செய்வதும், மரணம் மற்றும் பிசாசின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் ஒவ்வொரு தேவனுடையப் பிள்ளையின் பணியாகும். நீங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் இந்த நாளில், கர்த்தருக்காக ஆத்துமாவைக் காப்பாற்றுபவராக அல்லது ஆத்துமாவை வெல்லுபவராக இந்த மாபெரும் பணிக்கு உங்களைத் தயார்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இரட்சிப்பின் செய்தியை முடிந்தவரை பலருடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.