← செய்திகளுக்குத் திரும்பு
சிலுவையின் உபதேசம் நமக்கு தேவபெலனாயிருக்கிறது.
படத்தைப் பதிவிறக்கு

சிலுவையின் உபதேசம் நமக்கு தேவபெலனாயிருக்கிறது.

“வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:18 இயேசு கிறிஸ்துவை நம்பும் அனைவருக்கும், சிலுவையானது நம்பிக்கை மற்றும் மீட்பின் அடையாளமாக காணப்படுகிறது. இது மனிதகுலத்தின் மீது கர்த்தருடைய அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடு. இருப்பினும், சிலுவையின் செய்தியை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை நம்பி ஏற்றுக்கொண்டவர்கள், இருதயத்தை மறுரூபமாக்கும் வல்லமையை தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள். இன்னும் பலர் இயேசுவையும் அவருடைய சிலுவையையும் கேலி செய்தாலும், தேவனுடைய அன்பையும் இயேசுவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட வல்லமையையும் ஒருபொழுதும் மறைக்கவோ, மறக்கவோ முடியாது. இந்த வல்லமை வாழ்க்கையை மாற்றியமைக்கிறது, மற்றும் உடைந்த இருதயம் கொண்டவர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. நம்முடைய தற்போதைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நாளையத்தினத்தைக் குறித்த ஒரு சிறந்த நம்பிக்கை எப்பொழுதும் இருக்கிறது என்பதை சிலுவையின் செய்தி நமக்கு நினைப்பூட்டுகிறது. நீங்கள் பாவச் சுமையுடன் போராடிக் கொண்டிருந்தாலும் உங்களை நீங்களே கண்டித்துக் கொள்ளாமல், அப்படியே இருக்கிறவண்ணமாகவே இயேசுவிடம் வாருங்கள். உங்கள் இருதயத்தை அவரிடம் ஒப்படைத்து, உங்கள் வாழ்க்கையில் அவர் இடைப்பட்டு உங்களை மாற்ற அனுமதியுங்கள். சிலுவையின் செய்தியானது இரட்சிக்கப்படுகிற அனைவருக்கும் தேவபெலனாயிருக்கிறது. ஜெபம்: அன்பான கர்த்தராகிய இயேசுவே, எங்களுக்காக சிலுவையில் மரண தண்டனையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. உம்மை முழுமையாக விசுவாசித்து, வாழ்க்கையை மறுரூபமாக்கும் வல்லமையை அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:18 இயேசு கிறிஸ்துவை நம்பும் அனைவருக்கும், சிலுவையானது நம்பிக்கை மற்றும் மீட்பின் அடையாளமாக காணப்படுகிறது. இது மனிதகுலத்தின் மீது கர்த்தருடைய அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடு. இருப்பினும், சிலுவையின் செய்தியை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை நம்பி ஏற்றுக்கொண்டவர்கள், இருதயத்தை மறுரூபமாக்கும் வல்லமையை தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள். இன்னும் பலர் இயேசுவையும் அவருடைய சிலுவையையும் கேலி செய்தாலும், தேவனுடைய அன்பையும் இயேசுவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட வல்லமையையும் ஒருபொழுதும் மறைக்கவோ, மறக்கவோ முடியாது. இந்த வல்லமை வாழ்க்கையை மாற்றியமைக்கிறது, மற்றும் உடைந்த இருதயம் கொண்டவர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. நம்முடைய தற்போதைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நாளையத்தினத்தைக் குறித்த ஒரு சிறந்த நம்பிக்கை எப்பொழுதும் இருக்கிறது என்பதை சிலுவையின் செய்தி நமக்கு நினைப்பூட்டுகிறது. நீங்கள் பாவச் சுமையுடன் போராடிக் கொண்டிருந்தாலும் உங்களை நீங்களே கண்டித்துக் கொள்ளாமல், அப்படியே இருக்கிறவண்ணமாகவே இயேசுவிடம் வாருங்கள். உங்கள் இருதயத்தை அவரிடம் ஒப்படைத்து, உங்கள் வாழ்க்கையில் அவர் இடைப்பட்டு உங்களை மாற்ற அனுமதியுங்கள். சிலுவையின் செய்தியானது இரட்சிக்கப்படுகிற அனைவருக்கும் தேவபெலனாயிருக்கிறது. ஜெபம்: அன்பான கர்த்தராகிய இயேசுவே, எங்களுக்காக சிலுவையில் மரண தண்டனையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. உம்மை முழுமையாக விசுவாசித்து, வாழ்க்கையை மறுரூபமாக்கும் வல்லமையை அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.