திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டியவழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.ஏசாயா 48:17 எப்படி முன்னேறுவது என்று தெரியாமல் வாழ்க்கையில் சிக்கித் தவிக்கிறீர்களா? பிறர் கூறும் தவறான அறிவுரைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சரியான ஆலோசனையை வழங்க நம்பகமான வழிகாட்டியைத் தேடுகிறீர்களா? உங்கள் சிருஷ்டிகரான உங்கள் தேவனை நோக்கிப் பாருங்கள். நீங்கள் அவரை முழுவதுமாய்ச் சார்ந்துகொண்டால், உங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதில் நீங்கள் உறுதியாய் இருக்கலாம். ஆம்! கர்த்தர் உங்களை பிரயோஜனமுள்ள சரியான பாதையில் நடத்துவார். அவர் உங்களுக்கு அறிவுறுத்தி, வெற்றிபெறப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் காண்பிப்பார். நீங்கள் கண்டறிந்ததிலேயே சிறந்த தலைவரும் சிறந்த ஆசிரியருமாய் அவர் இருக்கிறார். அவர் இறுதி வரை உங்களுடன் இருப்பார். உங்களை ஒருபொழுதும் கைவிடவோ அல்லது விட்டு விலகவோ மாட்டார். அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைப் பின்பற்றுங்கள். நீங்கள் ஒருபொழுதும் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். வெட்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எனக்கு பிரயோஜனமான வழிகளைக் கற்றுக்கொடும். நான் உம்மை உண்மையாய்ப் பின்பற்றுவேன். ஆமென்.
உங்களுக்குப் பிரயோஜனமானதைப் போதிக்கும் தேவன்
“திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டியவழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.ஏசாயா 48:17 எப்படி முன்னேறுவது என்று தெரியாமல் வாழ்க்கையில் சிக்கித் தவிக்கிறீர்களா? பிறர் கூறும் தவறான அறிவுரைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சரியான ஆலோசனையை வழங்க நம்பகமான வழிகாட்டியைத் தேடுகிறீர்களா? உங்கள் சிருஷ்டிகரான உங்கள் தேவனை நோக்கிப் பாருங்கள். நீங்கள் அவரை முழுவதுமாய்ச் சார்ந்துகொண்டால், உங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதில் நீங்கள் உறுதியாய் இருக்கலாம். ஆம்! கர்த்தர் உங்களை பிரயோஜனமுள்ள சரியான பாதையில் நடத்துவார். அவர் உங்களுக்கு அறிவுறுத்தி, வெற்றிபெறப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் காண்பிப்பார். நீங்கள் கண்டறிந்ததிலேயே சிறந்த தலைவரும் சிறந்த ஆசிரியருமாய் அவர் இருக்கிறார். அவர் இறுதி வரை உங்களுடன் இருப்பார். உங்களை ஒருபொழுதும் கைவிடவோ அல்லது விட்டு விலகவோ மாட்டார். அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைப் பின்பற்றுங்கள். நீங்கள் ஒருபொழுதும் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். வெட்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எனக்கு பிரயோஜனமான வழிகளைக் கற்றுக்கொடும். நான் உம்மை உண்மையாய்ப் பின்பற்றுவேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

