← செய்திகளுக்குத் திரும்பு
பயப்படாதீர்கள், கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்
படத்தைப் பதிவிறக்கு

பயப்படாதீர்கள், கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்

“புதன்கிழமை, 6 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். ஏசாயா 41:10 வாழ்க்கையின் சவால்களுக்கும், ஜனங்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்களா?உங்கள் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் எப்பொழுது விடுபடுவீர்கள் என்று சிந்திக்கிறீர்களா? அன்பு தேவ பிள்ளையே, சோர்ந்துபோக வேண்டாம். இவ்வுலகில் நமக்கு உபத்திரவங்கள் உண்டு என்று இயேசு ஏற்கனவே நம்மிடம் கூறியிருக்கிறார். மேலும், நம்முடைய சவால்களை மேற்கொள்ள உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். உங்களுக்கான தேவ திட்டங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களை முற்றிலும் ஜெயம்கொள்வோராய்த் தேர்ந்தெடுத்து, அந்த நோக்கத்திற்காக உங்களைத் தயார்ப்படுத்துகிறார். தேவன் உங்களுடன் இருக்கிறார் என்பது மிகவும் ஊக்கமளிக்கக் கூடிய செய்தி. உங்களை வெற்றிபெறச் செய்வதற்கும், உங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் எப்பொழுதும் இருக்கிறார். திடன் கொள்ளுங்கள், பயப்படாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் பயத்தைப் போக்கி வெற்றியடைய எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 6 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். ஏசாயா 41:10 வாழ்க்கையின் சவால்களுக்கும், ஜனங்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்களா?உங்கள் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் எப்பொழுது விடுபடுவீர்கள் என்று சிந்திக்கிறீர்களா? அன்பு தேவ பிள்ளையே, சோர்ந்துபோக வேண்டாம். இவ்வுலகில் நமக்கு உபத்திரவங்கள் உண்டு என்று இயேசு ஏற்கனவே நம்மிடம் கூறியிருக்கிறார். மேலும், நம்முடைய சவால்களை மேற்கொள்ள உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். உங்களுக்கான தேவ திட்டங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களை முற்றிலும் ஜெயம்கொள்வோராய்த் தேர்ந்தெடுத்து, அந்த நோக்கத்திற்காக உங்களைத் தயார்ப்படுத்துகிறார். தேவன் உங்களுடன் இருக்கிறார் என்பது மிகவும் ஊக்கமளிக்கக் கூடிய செய்தி. உங்களை வெற்றிபெறச் செய்வதற்கும், உங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் எப்பொழுதும் இருக்கிறார். திடன் கொள்ளுங்கள், பயப்படாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் பயத்தைப் போக்கி வெற்றியடைய எனக்கு உதவி செய்யும். ஆமென்.