செவ்வாய், 26 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம். 1 தெசலோனிக்கேயர் 2:7 (TIRV) கர்த்தரின் அன்பும் அக்கறையும் நம்மீது காணப்படுகிறது என்பதை நினைவூட்டும் பகுதி இது. அப்போஸ்தலனாகிய பவுல் தனது முயற்சிகளை, தனது குழந்தையை மிகுந்த கவனத்துடன் வளர்க்கிற ஒரு பாலூட்டும் தாயின் முயற்சிகளுடன் ஒப்பிடுகிறார். ஒரு பாலூட்டும் தாய் தன் குழந்தையை மார்போடு சேர்த்து வைத்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள். குழந்தையின் இருதயத் துடிப்பை அவளால் உணர முடியும். பச்சிளம் குழந்தைகள் தங்கள் தேவைகள் மற்றும் அசௌகரியங்களை அழுகை மூலம் மட்டுமே தெரிவிக்கும் போது, தாய் விரைவாக புரிந்துகொண்டு அவர்களை கவனித்துக்கொள்கிறாள். குழந்தை ஊட்டச்சத்து மற்றும் கவனிப்புக்கு தன்னை முழுமையாக சார்ந்துள்ளது என்பதை அவள் அறிவாள். தன் குழந்தையைப் பராமரிக்க அவள் விழித்திருக்கத் தயங்குவதில்லை. அவ்வாறே, கர்த்தர் நம்மை நேசிக்கிறார், நம்மேல் அக்கறை காட்டுகிறார். நமக்குத் தேவையான அனைத்திற்கும் நாம் அவரையே முழுமையாகச் சார்ந்திருக்கிறோம் என்பதை அவர் அறிவார். அவர் நமக்கு உணவு, உறைவிடம், உடை ஆகியவற்றை தருகிறார். அவர் நமக்கு சுவாசிக்க காற்றையும் குடிக்க தண்ணீரையும் தருகிறார். ஆனால் மிக முக்கியமாக, அவர் நமக்கு அவருடைய அன்பையும் ஆவியையும் தருகிறார். இதேபோல், நாமும், புதிய விசுவாசிகளை மிகுந்த அக்கறையுடனும், அன்புடனும், அரவணைப்புடனும் நடத்தி, அவர்கள் வளர அவர்களை வழிநடத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். 1. ஒரு பாலூட்டும் தாயைப் போல் கர்த்தர் உங்களை பராமரிக்கும் சில செயல்கள் யாவை?2. கர்த்தர் உங்களை எப்படி வளர்க்கிறாரோ, அதே வழியில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை நீங்கள் எப்படி வளர்க்க முடியும்? மற்றவர்களை வளர்ப்பதற்கு உறுதியான இருதயமும், சௌரியமானவற்றைத் தியாகம் செய்யும் மனமும் தேவை. இயேசு உங்களுக்கு செய்ததைக் கவனித்து, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை வளர்த்ததைப் போல நான் மற்றவர்களை வளர்க்கவும், உம்மில் வளரவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
ஒரு பாலூட்டும் தாயைப் போல மற்றவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்.
“செயல்கள் யாவை?2. கர்த்தர் உங்களை எப்படி வளர்க்கிறாரோ, அதே வழியில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை நீங்கள் எப்படி வளர்க்க முடியும்? மற்றவர்களை வளர்ப்பதற்கு உறுதியான இருதயமும், சௌரியமானவற்றைத் தியாகம் செய்யும் மனமும் தேவை. இயேசு உங்களுக்கு செய்ததைக் கவனித்து, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை வளர்த்ததைப் போல நான் மற்றவர்களை வளர்க்கவும், உம்மில் வளரவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

