புதன்கிழமை, 20 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. ரோமர் 13:10 தேவன் அன்பாகவே இருக்கிறார். உண்மையான அன்பு தியாகம் செய்யத் தயாராயிருக்கும். தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை பலியாகக் கொடுத்ததன் மூலம் உங்கள் மீதும் என் மீதும் கொண்ட அன்பை எடுத்துக்காட்டினார். அவருடைய அன்பினிமித்தமே, நீங்கள் இயேசுவின் மூலம் ‘தேவனுடைய பிள்ளை’ என்றழைக்கப்படும் உரிமையோடு அவருடன் ஒப்புரவாக்கப்பட்டீர்கள். இந்த அன்பை அனுபவிக்கும் நீங்கள், உங்கள் குடும்பத்தினர் முதல் பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்நியர், அல்லது உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் உடன்பணியாளர் வரை உங்களைச் சுற்றியுள்ள அனைவருடனும் இயேசுவின் அன்பை பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறீர்கள். உண்மையான அன்பு, அன்பான வார்த்தைகளாலும் செயல்களினாலும் வெளிப்படுத்தப்படுகிறது. செயலை விடப் பேசுவது எளிது. இயேசு இவ்விரண்டையும் நிரூபித்து, அவரைப் பிரதிபலிக்க நம்மை அழைத்திருக்கிறார். # தேவனுடைய அன்பினால் நிரப்பப்படுங்கள்; உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களால் உலகம் அதை அனுபவிக்கட்டும்.# இப்படிப்பட்ட வாழ்க்கையே இவ்வுலகில் ஒருவர் செய்யக்கூடிய மிக முக்கியமான ஊழியம் ஆகும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வார்த்தைகளாலும் செயல்களாலும் உமது அன்பை வெளிப்படுத்த எனக்கு உதவும். ஆமென்.
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது.
“புதன்கிழமை, 20 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. ரோமர் 13:10 தேவன் அன்பாகவே இருக்கிறார். உண்மையான அன்பு தியாகம் செய்யத் தயாராயிருக்கும். தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை பலியாகக் கொடுத்ததன் மூலம் உங்கள் மீதும் என் மீதும் கொண்ட அன்பை எடுத்துக்காட்டினார். அவருடைய அன்பினிமித்தமே, நீங்கள் இயேசுவின் மூலம் 'தேவனுடைய பிள்ளை' என்றழைக்கப்படும் உரிமையோடு அவருடன் ஒப்புரவாக்கப்பட்டீர்கள். இந்த அன்பை அனுபவிக்கும் நீங்கள், உங்கள் குடும்பத்தினர் முதல் பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்நியர், அல்லது உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் உடன்பணியாளர் வரை உங்களைச் சுற்றியுள்ள அனைவருடனும் இயேசுவின் அன்பை பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறீர்கள். உண்மையான அன்பு, அன்பான வார்த்தைகளாலும் செயல்களினாலும் வெளிப்படுத்தப்படுகிறது. செயலை விடப் பேசுவது எளிது. இயேசு இவ்விரண்டையும் நிரூபித்து, அவரைப் பிரதிபலிக்க நம்மை அழைத்திருக்கிறார். # தேவனுடைய அன்பினால் நிரப்பப்படுங்கள்; உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களால் உலகம் அதை அனுபவிக்கட்டும்.# இப்படிப்பட்ட வாழ்க்கையே இவ்வுலகில் ஒருவர் செய்யக்கூடிய மிக முக்கியமான ஊழியம் ஆகும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வார்த்தைகளாலும் செயல்களாலும் உமது அன்பை வெளிப்படுத்த எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

