← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருடைய கண்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருடைய கண்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

“திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.2 நாளாகமம் 16:9 அன்பு தேவ பிள்ளையே, தேவன் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருப்பதால் நீங்கள் பயப்பட தேவையில்லை. அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறபடியால் அவருக்கு மறைவானது எதுவுமில்லை. இதை நினைவில் வைத்து, உங்கள் செயல்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் செய்வதெல்லாம் கர்த்தருக்கு முன்பாக வெளிப்படையாயிருக்கிறது. நீங்கள் மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியும், ஆனால் தேவனிடமிருந்து மறைக்க முடியாது. ஆகையால், உங்கள் வழிகளில் எப்பொழுதும் கவனமாயிருங்கள். அதே நேரத்தில், தேவன் உங்களை 24 மணி நேரமும் 7 நாட்களும் பாதுகாக்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அவருடைய அறிவும் அனுமதியும் இல்லாமல் ஒன்றும் உங்களுக்கு நேரிடாது. ஒரு அன்பான தந்தையாக, உங்களைப் பாதுகாப்பதற்கும், தேவைகளைச் சந்திப்பதற்கும் அவர் உங்களைக் கண்காணிக்கிறார். எனவே எல்லாம் சரியாக நடக்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சியாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்பொழுதும் என்னைக் கவனித்து, என்னைப் பாதுகாத்து, என் தேவைகளைச் சதிப்பதற்கு நன்றி. நான் உம்மையும் என் வாழ்க்கைக்கான, உம்முடைய திட்டத்தையும் நம்புகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.2 நாளாகமம் 16:9 அன்பு தேவ பிள்ளையே, தேவன் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருப்பதால் நீங்கள் பயப்பட தேவையில்லை. அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறபடியால் அவருக்கு மறைவானது எதுவுமில்லை. இதை நினைவில் வைத்து, உங்கள் செயல்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் செய்வதெல்லாம் கர்த்தருக்கு முன்பாக வெளிப்படையாயிருக்கிறது. நீங்கள் மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியும், ஆனால் தேவனிடமிருந்து மறைக்க முடியாது. ஆகையால், உங்கள் வழிகளில் எப்பொழுதும் கவனமாயிருங்கள். அதே நேரத்தில், தேவன் உங்களை 24 மணி நேரமும் 7 நாட்களும் பாதுகாக்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அவருடைய அறிவும் அனுமதியும் இல்லாமல் ஒன்றும் உங்களுக்கு நேரிடாது. ஒரு அன்பான தந்தையாக, உங்களைப் பாதுகாப்பதற்கும், தேவைகளைச் சந்திப்பதற்கும் அவர் உங்களைக் கண்காணிக்கிறார். எனவே எல்லாம் சரியாக நடக்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சியாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்பொழுதும் என்னைக் கவனித்து, என்னைப் பாதுகாத்து, என் தேவைகளைச் சதிப்பதற்கு நன்றி. நான் உம்மையும் என் வாழ்க்கைக்கான, உம்முடைய திட்டத்தையும் நம்புகிறேன். ஆமென்.