வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:7 சமாதானம் தேவனிடமிருந்தே வருகிறது, அவரே அதன் இறுதி ஆதாரம்.சமாதானத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துரைத்து, “என்னுடைய சமாதானத்தையே நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று இயேசு கூறினார்.இந்தச் சமாதானம் இயற்கையான புரிதலை மிஞ்சும் மற்றும் மனித விளக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும். கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது இயற்கையானது. இது உங்கள் உள்ளார்ந்த சமாதானத்தைச் சீர்குலைக்கும்.தேவனில் நம்பிக்கை வைப்பதும், அவரை விசுவாசிப்பதும் முக்கியம்.மனிதப் புத்திக்கு அப்பாற்பட்டதும் இயற்கைக்கு அப்பாற்பட்டதுமான தமது சமாதானத்தை அவரால் உங்களுக்குக் கொடுக்க முடியும்.அவருடைய சமாதானம் ஒரு கேடகமாய்ச் செயல்பட்டு, எதிரியின் எல்லாவிதக் குழப்பங்களிலிருந்தும், தீய திட்டங்களிலிருந்தும் உங்கள் இருதயத்தைப் பாதுகாக்கும்.இயேசுவைப் பற்றிக்கொண்டு அவருடைய சமாதானத்தை அனுபவியுங்கள். ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, உமது சமாதானத்தால் என் சிந்தையையும், இருதயத்தையும் நிரப்பும். ஆமென்.
தேவ சமாதானம் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள்...
“வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:7 சமாதானம் தேவனிடமிருந்தே வருகிறது, அவரே அதன் இறுதி ஆதாரம்.சமாதானத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துரைத்து, "என்னுடைய சமாதானத்தையே நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று இயேசு கூறினார்.இந்தச் சமாதானம் இயற்கையான புரிதலை மிஞ்சும் மற்றும் மனித விளக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும். கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது இயற்கையானது. இது உங்கள் உள்ளார்ந்த சமாதானத்தைச் சீர்குலைக்கும்.தேவனில் நம்பிக்கை வைப்பதும், அவரை விசுவாசிப்பதும் முக்கியம்.மனிதப் புத்திக்கு அப்பாற்பட்டதும் இயற்கைக்கு அப்பாற்பட்டதுமான தமது சமாதானத்தை அவரால் உங்களுக்குக் கொடுக்க முடியும்.அவருடைய சமாதானம் ஒரு கேடகமாய்ச் செயல்பட்டு, எதிரியின் எல்லாவிதக் குழப்பங்களிலிருந்தும், தீய திட்டங்களிலிருந்தும் உங்கள் இருதயத்தைப் பாதுகாக்கும்.இயேசுவைப் பற்றிக்கொண்டு அவருடைய சமாதானத்தை அனுபவியுங்கள். ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, உமது சமாதானத்தால் என் சிந்தையையும், இருதயத்தையும் நிரப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

