← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுக்குப் பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களுக்குப் பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை.

“வியாழன், 4 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு.2 நாளாகமம் 15:7 வாழ்க்கையில் நாம் அனைவரும், சவால்கள், பின்னடைவுகள் மற்றும் தடைகளை எதிர்கொள்கிறோம், அவை நம் ஆற்றலைச் சோதித்து, முன்னேறிச் செல்வதற்கான நமது திறனைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. திட மனதாய் இருப்பது என்பது ஒருபோதும் பலவீனமாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ உணரக்கூடாது என்பதல்ல. மாறாக, நம் அச்சங்களை எதிர்கொள்ளும் தைரியம், எதிர்ப்புகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் மற்றும் நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் விருப்பம் ஆகியவற்றைக் குறிக்கிறது. நாம் கஷ்டங்களை சந்திக்கும் போது, ​​அது நம் முயற்சியை கைவிடவும், விரக்திக்கு ஆளாகவும் நம்மைத் தூண்டுகிறது. எவ்வாறாயினும், கடினமான காலங்களில் நிலைத்திருப்பதன் மூலம், நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு நன்றாக வாழ்வதற்கு தேவையான மீளுந்திறன், நெகிழ்வுதிறன் மற்றும் உள்ளான பெலனை நாம் வளர்த்துக் கொள்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், வெற்றி என்பது ஒருபொழுதும் தோல்வியடையாமல் இருப்பதில் இல்லை. அது நாம் தடுமாறினாலும், தொடர்ந்து முயலும் தைரியத்தைக் குறிக்கிறது. நீங்கள் கடினமான காலங்களைக் கடந்து சென்றாலும், தேவன் உங்களுக்குப் பக்கபலமாய் இருந்து, சவால்களைக் கடந்து செல்லும்படி உங்களுக்கு உதவப் பலத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்து வெற்றிகரமாய் வெளியே வரச் செய்கிறார். எனவே, மனம்தளர்ந்து விடாதீர்கள்! பலங்கொண்டு திடமனதாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும்போது தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 4 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு.2 நாளாகமம் 15:7 வாழ்க்கையில் நாம் அனைவரும், சவால்கள், பின்னடைவுகள் மற்றும் தடைகளை எதிர்கொள்கிறோம், அவை நம் ஆற்றலைச் சோதித்து, முன்னேறிச் செல்வதற்கான நமது திறனைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. திட மனதாய் இருப்பது என்பது ஒருபோதும் பலவீனமாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ உணரக்கூடாது என்பதல்ல. மாறாக, நம் அச்சங்களை எதிர்கொள்ளும் தைரியம், எதிர்ப்புகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் மற்றும் நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் விருப்பம் ஆகியவற்றைக் குறிக்கிறது. நாம் கஷ்டங்களை சந்திக்கும் போது, ​​அது நம் முயற்சியை கைவிடவும், விரக்திக்கு ஆளாகவும் நம்மைத் தூண்டுகிறது. எவ்வாறாயினும், கடினமான காலங்களில் நிலைத்திருப்பதன் மூலம், நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு நன்றாக வாழ்வதற்கு தேவையான மீளுந்திறன், நெகிழ்வுதிறன் மற்றும் உள்ளான பெலனை நாம் வளர்த்துக் கொள்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், வெற்றி என்பது ஒருபொழுதும் தோல்வியடையாமல் இருப்பதில் இல்லை. அது நாம் தடுமாறினாலும், தொடர்ந்து முயலும் தைரியத்தைக் குறிக்கிறது. நீங்கள் கடினமான காலங்களைக் கடந்து சென்றாலும், தேவன் உங்களுக்குப் பக்கபலமாய் இருந்து, சவால்களைக் கடந்து செல்லும்படி உங்களுக்கு உதவப் பலத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்து வெற்றிகரமாய் வெளியே வரச் செய்கிறார். எனவே, மனம்தளர்ந்து விடாதீர்கள்! பலங்கொண்டு திடமனதாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும்போது தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.