← செய்திகளுக்குத் திரும்பு
தேவ கிருபை உங்களுக்குப் போதுமானது.
படத்தைப் பதிவிறக்கு

தேவ கிருபை உங்களுக்குப் போதுமானது.

“புதன், 24 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும். 2 கொரிந்தியர் 12:9 துன்பங்களைத் தாங்குவதற்குத் தேவையான கிருபையைத் தருவதாக தேவன் பவுலுக்கு உறுதியளித்தார். சில சூழ்நிலைகளில், நமது உடல் பலம், கல்வி அல்லது சம்பாதித்த செல்வம் ஆகியவை வாழ்க்கை நெருக்கடியைச் சமாளிக்க போதுமானதாய் இருக்காது. ஆம், உலகில் உள்ள பொருட்களெல்லாம் நம்மிடம் இருந்தாலும், தேவனுடைய கிருபை இல்லாமல் நாம் வாழ முடியாது. இயேசுவே இதற்கான தீர்வாய் இருக்கிறார். தேவ கிருபையை நம்பக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களைத் தாழ்த்தி, அவரை முழுமையாய்ச் சார்ந்திருங்கள். உங்கள் பலவீனத்தின் மத்தியில் அவருடைய பலம் வெளிப்படும். நீங்கள் ஓர் வெற்றியாளராய் மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் துன்பத்தில் நீர் எனக்குத் தந்த கிருபைக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 24 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும். 2 கொரிந்தியர் 12:9 துன்பங்களைத் தாங்குவதற்குத் தேவையான கிருபையைத் தருவதாக தேவன் பவுலுக்கு உறுதியளித்தார். சில சூழ்நிலைகளில், நமது உடல் பலம், கல்வி அல்லது சம்பாதித்த செல்வம் ஆகியவை வாழ்க்கை நெருக்கடியைச் சமாளிக்க போதுமானதாய் இருக்காது. ஆம், உலகில் உள்ள பொருட்களெல்லாம் நம்மிடம் இருந்தாலும், தேவனுடைய கிருபை இல்லாமல் நாம் வாழ முடியாது. இயேசுவே இதற்கான தீர்வாய் இருக்கிறார். தேவ கிருபையை நம்பக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களைத் தாழ்த்தி, அவரை முழுமையாய்ச் சார்ந்திருங்கள். உங்கள் பலவீனத்தின் மத்தியில் அவருடைய பலம் வெளிப்படும். நீங்கள் ஓர் வெற்றியாளராய் மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் துன்பத்தில் நீர் எனக்குத் தந்த கிருபைக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.