← செய்திகளுக்குத் திரும்பு
மன நிறைவாய் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
படத்தைப் பதிவிறக்கு

மன நிறைவாய் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

“ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். பிலிப்பியர் 4:11 வாழ்க்கையில் மனநிறைவைக் கண்டறிவது நம்மில் பெரும்பாலோருக்குச் சவாலான காரியமே. அதிகமான அல்லது புதுமையான காரியங்களுக்காய் நாம் அடிக்கடி ஏங்குவதைக் காண்கிறோம், இது, நாம் அடைந்து விட்டதுபோல் உணர்வதைத் தடுத்துக் கவலைக்கு வழிவகுக்கிறது. வேதனைகள் அமைதியின்மைக்கு வழிவகுக்கும். இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பங்களிக்கும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குச் சிறந்த வழி, நம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையக் கற்றுக்கொள்வதுதான். உயர்ந்த இலக்குகளை இலக்காகக் கொண்டு, சிறந்தவற்றிற்காகப் பாடுபடுவது நல்லதுதான். ஆனால், தேவனிடமிருந்து வரும் எந்த ஆசீர்வாதங்களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றில் திருப்தியடையக் கற்றுக்கொள்ளவும் தயாரயிருக்க வேண்டும். கவலைப்படுவதற்குப் பதிலாய்த், தேவனின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நமக்கு உண்மையான தேவைகள் இருந்தால், அவற்றைக் தேவனுடன் பகிர்ந்துகொண்டு, அவர் அவற்றை தருவதற்காகக் காத்திருக்கலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்க்கையில் மன நிறைவாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். பிலிப்பியர் 4:11 வாழ்க்கையில் மனநிறைவைக் கண்டறிவது நம்மில் பெரும்பாலோருக்குச் சவாலான காரியமே. அதிகமான அல்லது புதுமையான காரியங்களுக்காய் நாம் அடிக்கடி ஏங்குவதைக் காண்கிறோம், இது, நாம் அடைந்து விட்டதுபோல் உணர்வதைத் தடுத்துக் கவலைக்கு வழிவகுக்கிறது. வேதனைகள் அமைதியின்மைக்கு வழிவகுக்கும். இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பங்களிக்கும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குச் சிறந்த வழி, நம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையக் கற்றுக்கொள்வதுதான். உயர்ந்த இலக்குகளை இலக்காகக் கொண்டு, சிறந்தவற்றிற்காகப் பாடுபடுவது நல்லதுதான். ஆனால், தேவனிடமிருந்து வரும் எந்த ஆசீர்வாதங்களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றில் திருப்தியடையக் கற்றுக்கொள்ளவும் தயாரயிருக்க வேண்டும். கவலைப்படுவதற்குப் பதிலாய்த், தேவனின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நமக்கு உண்மையான தேவைகள் இருந்தால், அவற்றைக் தேவனுடன் பகிர்ந்துகொண்டு, அவர் அவற்றை தருவதற்காகக் காத்திருக்கலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்க்கையில் மன நிறைவாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.