வியாழன், 30 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.நீதிமொழிகள் 3:6 நம் அனைவருக்கும் கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன. மேலும், தேவனுடைய இராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதிலும் நம் பங்கைச் செய்ய விரும்புகிறோம். எனினும், நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்யாவிட்டால், அவருடைய இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது என்பதைப் பரிசுத்த வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. எனவே, நம்முடைய சொந்தத் திட்டங்களைப் பின்பற்றுவதை விட, இந்த உலகில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்கு முன்னுரிமை கொடுப்பது முக்கியம். உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று தெரியுமா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் நோக்கத்தைப் பற்றித் தெளிவாயிருக்கிறீர்களா? உங்கள் மனித உள்ளுணர்வுகள் மற்றும் ஆசைகளை நம்புவதற்குப் பதிலாக, உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய விருப்பத்தை கண்டுபிடித்து, எல்லாவற்றிலும் அவரைச் சார்ந்திருங்கள். அவர் உங்களைச் சரியான நேரத்தில் சரியான பாதையில் வழிநடத்துவார். அவர் உங்கள் வாழ்க்கையில் உள்ள கோணலான பாதைகள் அனைத்தையும் செவ்வையாக்கி, நித்தியத்திற்கு உங்களை அழைத்துச் செல்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சித்தத்தைப் புரிந்துகொண்டு அதை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். எனக்கு முன்பாக சென்று என் வாழ்க்கைப் பாதைகளைச் செவ்வையாக்கும். ஆமென்.
இயேசு உங்கள் பாதைகளைச் செவ்வையாக்குவார்.
“வியாழன், 30 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.நீதிமொழிகள் 3:6 நம் அனைவருக்கும் கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன. மேலும், தேவனுடைய இராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதிலும் நம் பங்கைச் செய்ய விரும்புகிறோம். எனினும், நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்யாவிட்டால், அவருடைய இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது என்பதைப் பரிசுத்த வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. எனவே, நம்முடைய சொந்தத் திட்டங்களைப் பின்பற்றுவதை விட, இந்த உலகில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்கு முன்னுரிமை கொடுப்பது முக்கியம். உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று தெரியுமா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் நோக்கத்தைப் பற்றித் தெளிவாயிருக்கிறீர்களா? உங்கள் மனித உள்ளுணர்வுகள் மற்றும் ஆசைகளை நம்புவதற்குப் பதிலாக, உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய விருப்பத்தை கண்டுபிடித்து, எல்லாவற்றிலும் அவரைச் சார்ந்திருங்கள். அவர் உங்களைச் சரியான நேரத்தில் சரியான பாதையில் வழிநடத்துவார். அவர் உங்கள் வாழ்க்கையில் உள்ள கோணலான பாதைகள் அனைத்தையும் செவ்வையாக்கி, நித்தியத்திற்கு உங்களை அழைத்துச் செல்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சித்தத்தைப் புரிந்துகொண்டு அதை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். எனக்கு முன்பாக சென்று என் வாழ்க்கைப் பாதைகளைச் செவ்வையாக்கும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

