செவ்வாய், 14 மே 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரெயர் 2:18 சோதனை என்பது தேவ பிள்ளைகளை வழிமறிக்கச் சாத்தான் பயன்படுத்தும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். இவ்வுலகில் யாரும் சோதனையினின்று தப்ப முடியாது. சோதனைகள் வெவ்வேறு நேரங்களிலும், எதிர்பாராத் திசைகளிலும், பல்வேறு பரிமாணங்களில் வருகின்றன. சோதனைக்கு இணங்குவது பாவத்திற்கு வழிவகுக்கிறது, பாவத்தின் சம்பளம் மரணம். எனவே, சோதனையைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பது முக்கியம். ஆனால் இயேசு ஓர் நல்ல செய்தியாயிருக்கிறார். அவர்தாமே சோதிக்கப்பட்டதால், சோதனையை வெல்ல உதவி செய்ய அவர் ஆயத்தமாய் இருக்கிறார். இயேசு சோதனைகளை முறியடித்தார். எனவே, அவருடைய உதவியை நாடுவோர் அனைவருக்கும் சோதனையிலிருந்து வெற்றி பெறுவற்குரிய வழியை காண்பிக்க ஆயத்தமாய் இருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் சோதனைகளைச் சமாளிக்க நீங்கள் போராடுகிறீர்களா? அப்படியானால், இயேசுவின் உதவியை நாடுங்கள். ஜெயங்கொள்பவராய் இருப்பதற்கு அவர் உங்களுக்கு உதவி செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சோதனைகளை மேற்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெற எனக்கு உதவி செய்யும். ஆமென்.
உங்கள் சோதனைகளை மேற்கொள்ள இயேசு உங்களுக்கு உதவ முடியும்.
“செவ்வாய், 14 மே 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரெயர் 2:18 சோதனை என்பது தேவ பிள்ளைகளை வழிமறிக்கச் சாத்தான் பயன்படுத்தும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். இவ்வுலகில் யாரும் சோதனையினின்று தப்ப முடியாது. சோதனைகள் வெவ்வேறு நேரங்களிலும், எதிர்பாராத் திசைகளிலும், பல்வேறு பரிமாணங்களில் வருகின்றன. சோதனைக்கு இணங்குவது பாவத்திற்கு வழிவகுக்கிறது, பாவத்தின் சம்பளம் மரணம். எனவே, சோதனையைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பது முக்கியம். ஆனால் இயேசு ஓர் நல்ல செய்தியாயிருக்கிறார். அவர்தாமே சோதிக்கப்பட்டதால், சோதனையை வெல்ல உதவி செய்ய அவர் ஆயத்தமாய் இருக்கிறார். இயேசு சோதனைகளை முறியடித்தார். எனவே, அவருடைய உதவியை நாடுவோர் அனைவருக்கும் சோதனையிலிருந்து வெற்றி பெறுவற்குரிய வழியை காண்பிக்க ஆயத்தமாய் இருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் சோதனைகளைச் சமாளிக்க நீங்கள் போராடுகிறீர்களா? அப்படியானால், இயேசுவின் உதவியை நாடுங்கள். ஜெயங்கொள்பவராய் இருப்பதற்கு அவர் உங்களுக்கு உதவி செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சோதனைகளை மேற்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெற எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

