புதன், 29 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.கலாத்தியர் 3:13 சிலுவையில் அறையப்படுவதென்பது, பழைய காலத்தில் மிகவும் இழிவான குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகும். சிலுவையில் அறையப்பட்ட எவரும் வாழ்க்கையில் சபிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இருப்பினும், இயேசு உங்களுக்காகவும் எனக்காகவும் இந்தக் கொடூரமான தண்டனையை ஏற்றுக்கொண்டார். அவருடைய சிலுவை மரணம், எல்லாச் சாபங்களிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் நம்மை விடுவிப்பதாய் இருக்கிறது. ஆம்! அவருடைய தியாக மரணத்தின் மூலம், இயேசு சாத்தானைத் தோற்கடித்து, தம்மை நம்புகிற அனைவரும் பாவத்தின் சாபத்திலிருந்து மீட்கப்பட வழிவகுத்தார். அவருடைய உயிர்த்தெழுதலின் வெளிச்சத்தில் நீங்கள் நடக்கிறவர்களாயிருங்கள். அப்பொழுது இந்தச் சத்தியம் உங்கள் பாதையை செவ்வைப்படுத்தி, உங்கள் இருதயத்தை எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தால் நிரப்பும். இந்த தெளிவான நற்செய்தியை விட்டுவிடாதீர்கள். இறுதிவரை இயேசுவுக்காக வாழுங்கள், அவருக்காக மட்டுமே வாழுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சிலுவையின் மரணத்திற்காக நன்றி செலுத்துகிறேன். இறுதிவரை நான் உமக்காக வாழ எனக்கு உதவி செய்யும்.
இயேசு உங்களுக்காகச் சாபமானார்.
“புதன், 29 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.கலாத்தியர் 3:13 சிலுவையில் அறையப்படுவதென்பது, பழைய காலத்தில் மிகவும் இழிவான குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகும். சிலுவையில் அறையப்பட்ட எவரும் வாழ்க்கையில் சபிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இருப்பினும், இயேசு உங்களுக்காகவும் எனக்காகவும் இந்தக் கொடூரமான தண்டனையை ஏற்றுக்கொண்டார். அவருடைய சிலுவை மரணம், எல்லாச் சாபங்களிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் நம்மை விடுவிப்பதாய் இருக்கிறது. ஆம்! அவருடைய தியாக மரணத்தின் மூலம், இயேசு சாத்தானைத் தோற்கடித்து, தம்மை நம்புகிற அனைவரும் பாவத்தின் சாபத்திலிருந்து மீட்கப்பட வழிவகுத்தார். அவருடைய உயிர்த்தெழுதலின் வெளிச்சத்தில் நீங்கள் நடக்கிறவர்களாயிருங்கள். அப்பொழுது இந்தச் சத்தியம் உங்கள் பாதையை செவ்வைப்படுத்தி, உங்கள் இருதயத்தை எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தால் நிரப்பும். இந்த தெளிவான நற்செய்தியை விட்டுவிடாதீர்கள். இறுதிவரை இயேசுவுக்காக வாழுங்கள், அவருக்காக மட்டுமே வாழுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சிலுவையின் மரணத்திற்காக நன்றி செலுத்துகிறேன். இறுதிவரை நான் உமக்காக வாழ எனக்கு உதவி செய்யும்”
நம்பிக்கையின் வார்த்தை

