← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள்மேல் தணியாத அன்பைப் பொழிந்தருள்வார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்கள்மேல் தணியாத அன்பைப் பொழிந்தருள்வார்.

“சனிக்கிழமை, 1 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் 20:6 * உங்களை யாரும் நேசிக்கவில்லை என்றெண்ணுவதால் நீங்கள் மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா?* பல்வேறு காரணங்களுக்காக உங்கள் சொந்தக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் நீங்கள் வெறுக்கப்படுவதையும், ஒதுக்கப்படுவதையும் உணருகிறீர்களா? * இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* அன்பான அவர், உங்களின் உணர்ச்சித் தேவைகள் எல்லாவற்றுக்கும் ஒரே ஆதாரமாய் இருக்கிறார்.* நீங்கள் விடாமுயற்சியோடும், உண்மையோடும் அவரை நேசித்து அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியும்போது, அவருடைய இருதயம் மகிழும்.* அப்பொழுது, தேவனுடைய அளவிட முடியாத அன்பை அனுபவிப்பீர்கள்.* தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் அவருடைய அன்பில் நீங்கள் திளைத்திருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கட்டளைகளைப் பின்பற்றவும், உம்மை அதிகமாய் நேசிக்கவும், கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 1 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் 20:6 * உங்களை யாரும் நேசிக்கவில்லை என்றெண்ணுவதால் நீங்கள் மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா?* பல்வேறு காரணங்களுக்காக உங்கள் சொந்தக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் நீங்கள் வெறுக்கப்படுவதையும், ஒதுக்கப்படுவதையும் உணருகிறீர்களா? * இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* அன்பான அவர், உங்களின் உணர்ச்சித் தேவைகள் எல்லாவற்றுக்கும் ஒரே ஆதாரமாய் இருக்கிறார்.* நீங்கள் விடாமுயற்சியோடும், உண்மையோடும் அவரை நேசித்து அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியும்போது, அவருடைய இருதயம் மகிழும்.* அப்பொழுது, தேவனுடைய அளவிட முடியாத அன்பை அனுபவிப்பீர்கள்.* தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் அவருடைய அன்பில் நீங்கள் திளைத்திருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது கட்டளைகளைப் பின்பற்றவும், உம்மை அதிகமாய் நேசிக்கவும், கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.