← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களைத் தமது பரிசுத்த ஜனமாய் நிலைப்படுத்துவார்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களைத் தமது பரிசுத்த ஜனமாய் நிலைப்படுத்துவார்

“வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். உபாகமம் 28:9 "நம்முடைய தேவன் பரிசுத்தராய் இருப்பதால், நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. பரிசுத்தம் இல்லாமல் தேவனைத் தரிசிக்க முடியாது. நீங்கள் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். நீங்கள், வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் பரிசுத்தமாயிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்தக் கேடான உலகில் பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சவாலானது என்பதைத் தேவன் அறிவார். அதனால்தான், பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் இருப்பார் என்றும் உங்கள் வரம்புகளிலெல்லாம் உங்களுக்கு உதவுவார் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். எனவே, மனத்தாழ்மையுடன் உங்களைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய வழிகாட்டல்களுக்கும், அறிவுரைகளுக்கும் கீழ்ப்படிந்திடுங்கள். நீங்கள் இயேசுவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்போது , நிச்சயமாக சோதனைக்கும், பாவத்திற்கும் அடிபணிவதிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.. தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ உறுதிகொண்டால், அவருடைய கிருபையை அனுதினமும் அனுபவிப்பீர்கள். உங்களை இகழ்வோரைப் பற்றியும் அல்லது உங்கள் அழிவுக்குக் கண்ணிகளை வைப்போரைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எல்லாத் தீய திட்டங்களிலிருந்தும் அவர் உங்களைக் காப்பார். அவர் உங்களைத் தம்முடைய பரிசுத்த ஜனமாய் நிலைநிறுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் பரிசுத்தமாயும், உமக்குப் பிரியமாயும் இருக்க எனக்கு உதவி செய்யும். என்னையும் என் குடும்பத்தையும் உமது பரிசுத்த ஜனமாய் மாற்றுவீராக. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். உபாகமம் 28:9 “நம்முடைய தேவன் பரிசுத்தராய் இருப்பதால், நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. பரிசுத்தம் இல்லாமல் தேவனைத் தரிசிக்க முடியாது. நீங்கள் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். நீங்கள், வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் பரிசுத்தமாயிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்தக் கேடான உலகில் பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சவாலானது என்பதைத் தேவன் அறிவார். அதனால்தான், பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் இருப்பார் என்றும் உங்கள் வரம்புகளிலெல்லாம் உங்களுக்கு உதவுவார் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். எனவே, மனத்தாழ்மையுடன் உங்களைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய வழிகாட்டல்களுக்கும், அறிவுரைகளுக்கும் கீழ்ப்படிந்திடுங்கள். நீங்கள் இயேசுவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்போது , நிச்சயமாக சோதனைக்கும், பாவத்திற்கும் அடிபணிவதிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.. தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ உறுதிகொண்டால், அவருடைய கிருபையை அனுதினமும் அனுபவிப்பீர்கள். உங்களை இகழ்வோரைப் பற்றியும் அல்லது உங்கள் அழிவுக்குக் கண்ணிகளை வைப்போரைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எல்லாத் தீய திட்டங்களிலிருந்தும் அவர் உங்களைக் காப்பார். அவர் உங்களைத் தம்முடைய பரிசுத்த ஜனமாய் நிலைநிறுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் பரிசுத்தமாயும், உமக்குப் பிரியமாயும் இருக்க எனக்கு உதவி செய்யும். என்னையும் என் குடும்பத்தையும் உமது பரிசுத்த ஜனமாய் மாற்றுவீராக. ஆமென்.