← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களைத் தமது புத்திரராய் எண்ணி நடத்துவதால் உபத்திரவங்களைச் சிட்சையாய்ச் சகித்துக்கொள்ளுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களைத் தமது புத்திரராய் எண்ணி நடத்துவதால்...

“செவ்வாய், 28 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; எபிரெயர் 12A அன்பு தேவ பிள்ளையே,# நீங்கள் தனித்தன்மையும் விசேஷமும் நிறைந்தவர்கள்.# தேவன் தமது சித்தத்திற்காய் உருவாக்கின மிகச் சிறந்த படைப்பாய் நீங்கள் இருக்கிறீர்கள்.# தேவன் உங்களில் அன்பாயிருந்து உங்களை விசாரிக்கிறவராய் இருக்கிறார்.# உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் உங்களை வழிநடத்தவும், ஜெயங்கொள்ள உங்களைப் பெலப்படுத்தித் தமது பிரதிநிதிகளாய் இவ்வுலகில் நிறுத்தவும் தமது பரிசுத்த ஆவியை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். # அவர் எப்போதும் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, நீங்கள் வழிவிலகும்போது உங்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறார்.# சிட்சையானது தற்காலத்திலே கடினமாயும் வேதனையாயும் காணப்படும்.# ஆகிலும், சோர்ந்துபோகாதிருங்கள். ஏனென்றால், தமது பிள்ளைகளாய்க் கருதுவோரையே தேவன் சிட்சிக்கிறார்.# யாரும் பூரணரல்லாததால் சிட்சை நம்முடைய பிரயோஜனத்திற்காகவே கிடைக்கிறது.# அப்படிப்பட்ட சிட்சையைச் சகித்துக்கொள்ளுங்கள். முரட்டாட்டம் செய்யாமல் சீர்பொருந்தித் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழப் பிரயாசப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சிட்சையைச் சகித்து என் தவறுகளைத் திருத்திக்கொள்ள எனக்குதவும். உம்மைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 28 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; எபிரெயர் 12A அன்பு தேவ பிள்ளையே,# நீங்கள் தனித்தன்மையும் விசேஷமும் நிறைந்தவர்கள்.# தேவன் தமது சித்தத்திற்காய் உருவாக்கின மிகச் சிறந்த படைப்பாய் நீங்கள் இருக்கிறீர்கள்.# தேவன் உங்களில் அன்பாயிருந்து உங்களை விசாரிக்கிறவராய் இருக்கிறார்.# உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் உங்களை வழிநடத்தவும், ஜெயங்கொள்ள உங்களைப் பெலப்படுத்தித் தமது பிரதிநிதிகளாய் இவ்வுலகில் நிறுத்தவும் தமது பரிசுத்த ஆவியை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். # அவர் எப்போதும் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, நீங்கள் வழிவிலகும்போது உங்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறார்.# சிட்சையானது தற்காலத்திலே கடினமாயும் வேதனையாயும் காணப்படும்.# ஆகிலும், சோர்ந்துபோகாதிருங்கள். ஏனென்றால், தமது பிள்ளைகளாய்க் கருதுவோரையே தேவன் சிட்சிக்கிறார்.# யாரும் பூரணரல்லாததால் சிட்சை நம்முடைய பிரயோஜனத்திற்காகவே கிடைக்கிறது.# அப்படிப்பட்ட சிட்சையைச் சகித்துக்கொள்ளுங்கள். முரட்டாட்டம் செய்யாமல் சீர்பொருந்தித் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழப் பிரயாசப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சிட்சையைச் சகித்து என் தவறுகளைத் திருத்திக்கொள்ள எனக்குதவும். உம்மைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.