← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.

“திங்கட்கிழமை, 4 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.1 சாமுவேல் 12:22 அன்பு தேவ பிள்ளையே, உங்கள் அன்புக்குரியவர்களால் கைவிடப்பட்டதாய் உணருகிறீர்களா? மனிதர்கள், இனி உங்களை விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? தயவு செய்து வருத்தப்பட வேண்டாம். மனிதர்கள் உங்களைச் சில நேரங்களில் புறக்கணிக்கலாம், ஆனால் இயேசு உங்களை ஒருபொழுதும் புறக்கணிக்கமாட்டார். அவர் உங்களை நேசித்து, உங்களைத் தமக்குச் சொந்தமாகக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இயேசு தம்முடைய இரத்தத்தால் உங்களை மீட்டுக்கொண்டதால், நீங்கள் முழுவதுமாய் இராஜாதி இராஜாவுக்குச் சொந்தமானவர்களாய் இருக்கிறீர்கள். என்ன நேர்ந்தாலும் அவர் உங்களைக் கைவிடமாட்டார். கர்த்தர் உங்களை மதித்து நேசிக்கிறார். உங்கள்மீதான அவர் அன்பு நிபந்தனையற்றது. வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் உங்களுக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் அவர் எப்பொழுதும் இருக்கிறார். அவர்மீது உங்கள் நம்பிக்கையை வைத்திருங்கள், எந்தத் தடையையும் கடக்கும் வல்லமையை நீங்கள் காண்பீர்கள். எனவே, கவலைப்படாமல் மகிழ்ச்சியாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னைக் கைவிடமாட்டீர் என்று வாக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.1 சாமுவேல் 12:22 அன்பு தேவ பிள்ளையே, உங்கள் அன்புக்குரியவர்களால் கைவிடப்பட்டதாய் உணருகிறீர்களா? மனிதர்கள், இனி உங்களை விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? தயவு செய்து வருத்தப்பட வேண்டாம். மனிதர்கள் உங்களைச் சில நேரங்களில் புறக்கணிக்கலாம், ஆனால் இயேசு உங்களை ஒருபொழுதும் புறக்கணிக்கமாட்டார். அவர் உங்களை நேசித்து, உங்களைத் தமக்குச் சொந்தமாகக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இயேசு தம்முடைய இரத்தத்தால் உங்களை மீட்டுக்கொண்டதால், நீங்கள் முழுவதுமாய் இராஜாதி இராஜாவுக்குச் சொந்தமானவர்களாய் இருக்கிறீர்கள். என்ன நேர்ந்தாலும் அவர் உங்களைக் கைவிடமாட்டார். கர்த்தர் உங்களை மதித்து நேசிக்கிறார். உங்கள்மீதான அவர் அன்பு நிபந்தனையற்றது. வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் உங்களுக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் அவர் எப்பொழுதும் இருக்கிறார். அவர்மீது உங்கள் நம்பிக்கையை வைத்திருங்கள், எந்தத் தடையையும் கடக்கும் வல்லமையை நீங்கள் காண்பீர்கள். எனவே, கவலைப்படாமல் மகிழ்ச்சியாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னைக் கைவிடமாட்டீர் என்று வாக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.