← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் இழந்ததைத் தேவன் உங்களுக்குத் திரும்பத் தருவார்
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் இழந்ததைத் தேவன் உங்களுக்குத் திரும்பத் தருவார்

“சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். யோவேல் 2:25 - உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் தொழிலிலோ ஏற்பட்ட இழப்பால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?- இழப்பின் துக்கத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பது மிகவும் கடினம். மேலும் பலர் உங்கள் வேதனையைப் புரிந்துகொள்ளக்கூட மாட்டார்கள். - மற்றவர்களை விட உங்களை அதிகமாய் நேசிக்கும் தேவன், அதை அனுமதிப்பதற்கு ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்.- நாம் காரணத்தை உணராமல் இருப்பதனால் இந்த வேதனையை ஏற்றுக்கொள்வது கடினமாயிருக்கிறது.- துன்பத்தையும் இழப்பையும் சகித்துக்கொள்ளத் தேவன் அனுமதித்திருப்பது உங்கள் நன்மைக்காகவே இருக்கும். - எனவே, மனம் தளராதீர்கள். மாறாக, இயேசுவை இன்னும் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்; அவர் உங்கள் கண்ணீரைத் துடைத்து, உங்கள் இருதயத்தை ஆறுதல்படுத்துவார்.- அவர் நீங்கள் இழந்ததை இரட்டிப்பாக திரும்ப தந்து, உரிய நேரத்தில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இழந்த அனைத்திற்கும் ஈடாய் என்னை இரட்டிப்பாக ஆசீர்வதியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். யோவேல் 2:25 - உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் தொழிலிலோ ஏற்பட்ட இழப்பால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?- இழப்பின் துக்கத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பது மிகவும் கடினம். மேலும் பலர் உங்கள் வேதனையைப் புரிந்துகொள்ளக்கூட மாட்டார்கள். - மற்றவர்களை விட உங்களை அதிகமாய் நேசிக்கும் தேவன், அதை அனுமதிப்பதற்கு ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்.- நாம் காரணத்தை உணராமல் இருப்பதனால் இந்த வேதனையை ஏற்றுக்கொள்வது கடினமாயிருக்கிறது.- துன்பத்தையும் இழப்பையும் சகித்துக்கொள்ளத் தேவன் அனுமதித்திருப்பது உங்கள் நன்மைக்காகவே இருக்கும். - எனவே, மனம் தளராதீர்கள். மாறாக, இயேசுவை இன்னும் உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்; அவர் உங்கள் கண்ணீரைத் துடைத்து, உங்கள் இருதயத்தை ஆறுதல்படுத்துவார்.- அவர் நீங்கள் இழந்ததை இரட்டிப்பாக திரும்ப தந்து, உரிய நேரத்தில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இழந்த அனைத்திற்கும் ஈடாய் என்னை இரட்டிப்பாக ஆசீர்வதியும். ஆமென்.