← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்கள் வெளிச்சம்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்கள் வெளிச்சம்

“வியாழன், 15 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? சங்கீதம் 27:1 தேவன் உங்கள் இரட்சிப்பாயிருக்கிறாரா? மாம்சமான வார்த்தையாகிய இயேசுவே மெய்யான ஒளி. அவருடைய வார்த்தை நம் கால்களுக்குத் தீபமாயும், நம் பாதைக்கு வெளிச்சமாயும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் ஒருபொழுதும் தடுமாறமாட்டான். உங்கள் பாதை குண்டும் குழியுமாகவும், சவாலாகவும், ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாகயும் இருக்கலாம். ஆனால், நீங்கள் அவருடைய வார்த்தையை முழுமையாய்ச் சார்ந்திருந்தால், அவருடைய வெளிச்சம் ஒவ்வொரு அடியிலும் உங்களை வழிகாட்டி நடத்தும். பந்தயத்தை அற்புதமாய் முடித்து வெற்றி பெறுவீர்கள். முடிவு எப்பொழுதும் மகிமையாகவே இருக்கும். நீங்கள் அவருடைய வார்த்தையைப் பின்பற்றும்போது, ​​உங்கள் வாழ்க்கை தேவனுக்குப் பிரியமாயிருக்கும். அவரே உங்கள் இரட்சிப்பாய் இருப்பார். நீங்கள் எந்தத் தீமைக்கும் பயப்பட மாட்டீர்கள். நீங்கள் மனிதர்களுக்கும் உலக வல்லமைக்கும் பயப்படுகிறீர்களா? பயப்படாதீர்கள். தேவனைச் சார்ந்திருங்கள்; அவர் உங்கள் கோட்டையாயிருப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய ஒளி என்னிலும் என் பாதையிலும் பிரகாசிக்கட்டும். தயவுகூர்ந்து ஜெயமாய் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? சங்கீதம் 27:1 தேவன் உங்கள் இரட்சிப்பாயிருக்கிறாரா? மாம்சமான வார்த்தையாகிய இயேசுவே மெய்யான ஒளி. அவருடைய வார்த்தை நம் கால்களுக்குத் தீபமாயும், நம் பாதைக்கு வெளிச்சமாயும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் ஒருபொழுதும் தடுமாறமாட்டான். உங்கள் பாதை குண்டும் குழியுமாகவும், சவாலாகவும், ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாகயும் இருக்கலாம். ஆனால், நீங்கள் அவருடைய வார்த்தையை முழுமையாய்ச் சார்ந்திருந்தால், அவருடைய வெளிச்சம் ஒவ்வொரு அடியிலும் உங்களை வழிகாட்டி நடத்தும். பந்தயத்தை அற்புதமாய் முடித்து வெற்றி பெறுவீர்கள். முடிவு எப்பொழுதும் மகிமையாகவே இருக்கும். நீங்கள் அவருடைய வார்த்தையைப் பின்பற்றும்போது, ​​உங்கள் வாழ்க்கை தேவனுக்குப் பிரியமாயிருக்கும். அவரே உங்கள் இரட்சிப்பாய் இருப்பார். நீங்கள் எந்தத் தீமைக்கும் பயப்பட மாட்டீர்கள். நீங்கள் மனிதர்களுக்கும் உலக வல்லமைக்கும் பயப்படுகிறீர்களா? பயப்படாதீர்கள். தேவனைச் சார்ந்திருங்கள்; அவர் உங்கள் கோட்டையாயிருப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய ஒளி என்னிலும் என் பாதையிலும் பிரகாசிக்கட்டும். தயவுகூர்ந்து ஜெயமாய் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.