← செய்திகளுக்குத் திரும்பு
சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி தேவன் உங்களைப் பாதுகாப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி தேவன் உங்களைப் பாதுகாப்பார்.

“புதன், 31 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். வெளிப்படுத்தல் 3:10 - வரப்போகும் கடுமையான சோதனை மற்றும் கஷ்ட காலத்தைப் பற்றிப் பரிசுத்த வேதாகமம் பேசுகிறது. இது, உலகை ஆள இயேசு வருவதற்கு முன் உள்ள தேவதிட்டத்தின் ஒரு பகுதியாகும்.- இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்து, பாவங்கள் மன்னிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதாய்த் தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார்.- எனவே, இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து, அவருடைய உபதேசங்களைப் பின்பற்றி, நீதியாய் வாழ்ந்து பாவத்தைத் தவிர்ப்பதும் அவசியம்.- இந்த சவாலான நேரத்திற்கு நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா என்று உங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இயேசுவை நம்பி அவருடைய போதனைகளைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழுகிறீர்களா?- உங்கள் பாவங்களுக்காக மன்னிப்பைப் பெற்று, பரிசுத்த வாழ்க்கை வாழ முயற்சி செய்து, இந்தக் கடினமான காலங்களில் பாதுகாப்பிற்காக அவர் மேல் நம்பிக்கை வைத்து, காலம் கடக்குமுன் இயேசுவைச் சந்திக்க உங்களைத் தகுதிப்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சோதனைக் காலத்திற்கு தப்பும்படி என்னைக் காப்பாற்றும். உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு வழிகாட்டும். என் வழியில் வரும் எந்தச் சோதனைகளையும் மேற்கொள்ளும் பலத்தை எனக்குத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 31 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். வெளிப்படுத்தல் 3:10 - வரப்போகும் கடுமையான சோதனை மற்றும் கஷ்ட காலத்தைப் பற்றிப் பரிசுத்த வேதாகமம் பேசுகிறது. இது, உலகை ஆள இயேசு வருவதற்கு முன் உள்ள தேவதிட்டத்தின் ஒரு பகுதியாகும்.- இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்து, பாவங்கள் மன்னிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதாய்த் தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார்.- எனவே, இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து, அவருடைய உபதேசங்களைப் பின்பற்றி, நீதியாய் வாழ்ந்து பாவத்தைத் தவிர்ப்பதும் அவசியம்.- இந்த சவாலான நேரத்திற்கு நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா என்று உங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இயேசுவை நம்பி அவருடைய போதனைகளைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழுகிறீர்களா?- உங்கள் பாவங்களுக்காக மன்னிப்பைப் பெற்று, பரிசுத்த வாழ்க்கை வாழ முயற்சி செய்து, இந்தக் கடினமான காலங்களில் பாதுகாப்பிற்காக அவர் மேல் நம்பிக்கை வைத்து, காலம் கடக்குமுன் இயேசுவைச் சந்திக்க உங்களைத் தகுதிப்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சோதனைக் காலத்திற்கு தப்பும்படி என்னைக் காப்பாற்றும். உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு வழிகாட்டும். என் வழியில் வரும் எந்தச் சோதனைகளையும் மேற்கொள்ளும் பலத்தை எனக்குத் தாரும். ஆமென்.