புதன், 3 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். சங்கீதம் 128:2 நம் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பதாய் தேவன் வாக்களிக்கிறார். நம் தொழிலாயிருந்தாலும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதாயிருந்தாலும், அல்லது அன்றாட வாழ்க்கையின் சாதாரணப் பணிகளாய் இருந்தாலும், அந்த வேலையின் “பலனை” அல்லது விளைவை நாம் அனுபவிப்போம் என்று தேவன் கூறுகிறார்.நாம் தேவனுக்கு முதலிடம் கொடுத்து, நம்முடைய வேலையில் அவரைக் கனப்படுத்தும்போது, பூமிக்கும் நித்தியத்திற்கும் உரிய வெகுமதிகளை நாம் எதிர்பார்க்கலாம்.எனவே, உங்கள் அன்றாடப் பணிகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றும்போது, உங்கள் உழைப்பு அர்த்தமானது என்பதையறிந்து உற்சாகப்படுங்கள். கர்த்தர் உங்கள் முயற்சிகளைப் பார்க்கிறார் என்பதையும், அவருடைய சரியான நேரத்திலும் வழியிலும் உங்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார் என்பதையும் அறிந்து, விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். ஜெபம்: பரலோகத் தகப்பனே, உழைப்பின் பலனுக்காகவும், என் கைகளின் உழைப்பால் உம்மை மகிமைப்படுத்தும் வாய்ப்பிற்காகவும் நன்றி செலுத்துகிறேன். தயவுகூர்ந்து நீர் விரும்புகிறபடி என் உழைப்பின் பலனை ஆசீர்வதியும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் கைகளின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிடுவீர்கள்
“ம் அறிந்து, விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். ஜெபம்: பரலோகத் தகப்பனே, உழைப்பின் பலனுக்காகவும், என் கைகளின் உழைப்பால் உம்மை மகிமைப்படுத்தும் வாய்ப்பிற்காகவும் நன்றி செலுத்துகிறேன். தயவுகூர்ந்து நீர் விரும்புகிறபடி என் உழைப்பின் பலனை ஆசீர்வதியும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

