← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் தம்முடைய வார்த்தையை அனுப்பி உங்களைக் குணமாக்குவார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் தம்முடைய வார்த்தையை அனுப்பி உங்களைக் குணமாக்குவார்.

“வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.சங்கீதம் 107:20 உங்கள் மனம் ஒரு போர்க்களமாய்இருப்பதால், தொடர்ந்து அதை வெல்லப்பிசாசு முயற்சிக்கிறான். வாழ்க்கையின் சண்டைகளில், உங்கள் எண்ணங்களும் வார்த்தைகளும் முக்கியமானவை—பிசாசு உங்களை ஏமாற்றி உங்களை எதிர்மறையாய்ப் பேசவைப்பான் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், இதற்கு தேவன் ஒரு பரிகாரத்தை வைத்திருக்கிறார். அது என்னவென்றால் தேவவார்த்தை உங்கள் ஆவிக்குள் ஊடுருவும் வரை உங்கள் எண்ணங்களை நீங்கள் அவர் வார்த்தைகளால் நிரப்ப வேண்டும். நீங்கள் அவருடைய வார்த்தைகளைப்பற்றிக்கொள்ளும்போது, ​​அவை மெய்யான ஜீவனையும், நல்ல ஆரோக்கியத்தையும் உங்கள் உள்ளார்ந்த மனிதனுக்குள் அளிக்கும். அவருடைய வாக்குறுதிகளை நீங்கள் எவ்வளவு அதிகமாக தியானிக்கின்றீர்களோ, அவ்வளவு அதிகமாய் உங்கள் சிந்தை மாற்றப்பட்டு, அவருடைய சித்தத்தோடு இசைவுள்ளதாக்கும். மேலும் எத்தகையத் தடைகளையும் தாண்டி வெற்றியுடன் வாழும் பெலனைப் பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய வார்த்தைகளால் என் எண்ணங்களை நான் நிரப்பி, எல்லாவற்றையும் மேற்கொள்ள எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.சங்கீதம் 107:20 உங்கள் மனம் ஒரு போர்க்களமாய்இருப்பதால், தொடர்ந்து அதை வெல்லப்பிசாசு முயற்சிக்கிறான். வாழ்க்கையின் சண்டைகளில், உங்கள் எண்ணங்களும் வார்த்தைகளும் முக்கியமானவை—பிசாசு உங்களை ஏமாற்றி உங்களை எதிர்மறையாய்ப் பேசவைப்பான் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், இதற்கு தேவன் ஒரு பரிகாரத்தை வைத்திருக்கிறார். அது என்னவென்றால் தேவவார்த்தை உங்கள் ஆவிக்குள் ஊடுருவும் வரை உங்கள் எண்ணங்களை நீங்கள் அவர் வார்த்தைகளால் நிரப்ப வேண்டும். நீங்கள் அவருடைய வார்த்தைகளைப்பற்றிக்கொள்ளும்போது, ​​அவை மெய்யான ஜீவனையும், நல்ல ஆரோக்கியத்தையும் உங்கள் உள்ளார்ந்த மனிதனுக்குள் அளிக்கும். அவருடைய வாக்குறுதிகளை நீங்கள் எவ்வளவு அதிகமாக தியானிக்கின்றீர்களோ, அவ்வளவு அதிகமாய் உங்கள் சிந்தை மாற்றப்பட்டு, அவருடைய சித்தத்தோடு இசைவுள்ளதாக்கும். மேலும் எத்தகையத் தடைகளையும் தாண்டி வெற்றியுடன் வாழும் பெலனைப் பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய வார்த்தைகளால் என் எண்ணங்களை நான் நிரப்பி, எல்லாவற்றையும் மேற்கொள்ள எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.