← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் தேவனின் நியமங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய பகுத்தறிவைத் தேடுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் தேவனின் நியமங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய பகுத்தறிவைத்...

“வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். சங்கீதம் 119:125 இன்றைய உலகில் பல்வேறு உபதேசங்கள் மற்றும் இறையியல் கோட்பாடுகள் உள்ளன. ஆனால், எல்லாம் சரியானவை இல்லை. பொய்ப் போதகர்களைப் பற்றி இயேசு எச்சரித்தார். குறிப்பாகக் கடைசி நாட்களில், உலக ஆதாயங்களுக்காகவும் தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் தேவனின் நாமத்தில் தைரியமாய்ச் சத்தியத்தைப் புரட்டுவார்கள் என்றார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது மிகப் பிரசித்திபெற்ற பழமொழியாகும். எனவே, போலி மற்றும் தவறான போதனைகளிலிருந்து உண்மையைப் பகுத்தறிவது மிக முக்கியமானது. அப்போஸ்தலன் பவுலின் நாட்களில் பெரேயாவின் மக்கள் அவருடைய வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, தேவனுடைய வார்த்தையோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தனர். அவர் பேசியதையெல்லாம் அவர்கள் கண்மூடித்தனமாய் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் உண்மையைக் கற்றுக்கொண்டு அதைப் பின்பற்றுவதில் நேரத்தைச் செலவிட்டனர். # நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதில் நேரத்தைச் செலவிடுகிறீர்களா, அதைப் புரிந்து கொள்ள ஆழமாய்த் தியானிக்கிறீர்களா?# பரிசுத்த ஆவியானவரே உங்களுக்குள் இருக்கும் மேலான போதகர். நீங்கள் அவருக்குச் செவிசாய்த்தால், அவர் உங்களை எல்லா உண்மைகளிலும் வழிநடத்துவார்.# போதகர்களைக் குருட்டாட்டமாய்ப் பின்பற்றாதீர்கள்.# அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், ஆனால் அவர்களின் வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைக்கு முரணானதா இல்லையா என்று ஆராய்ந்து, அவை சரியாக இருந்தால் மட்டும் பின்பற்றுங்கள். # மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், தேவனுக்குப் பயப்படுங்கள்.# உங்கள் தவறுகளுக்கு, போதகர்கள் உட்பட யாரையும் குறை சொல்ல முடியாது.# உங்கள் வாழ்க்கைக்கும் செயல்களுக்கும் நீங்கள்தான் பொறுப்பு.# ஆகவே, உண்மையைப் புரிந்துகொண்டு பின்பற்றத் தேவனின் பகுத்தறிவை நாடுவது பாதுகாப்பானது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து உண்மை இன்னதென்று வேறுபடுத்திப் பார்க்கவும், அதைப் பின்பற்றவும் எனக்குப் பகுத்தறிவைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். சங்கீதம் 119:125 இன்றைய உலகில் பல்வேறு உபதேசங்கள் மற்றும் இறையியல் கோட்பாடுகள் உள்ளன. ஆனால், எல்லாம் சரியானவை இல்லை. பொய்ப் போதகர்களைப் பற்றி இயேசு எச்சரித்தார். குறிப்பாகக் கடைசி நாட்களில், உலக ஆதாயங்களுக்காகவும் தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் தேவனின் நாமத்தில் தைரியமாய்ச் சத்தியத்தைப் புரட்டுவார்கள் என்றார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது மிகப் பிரசித்திபெற்ற பழமொழியாகும். எனவே, போலி மற்றும் தவறான போதனைகளிலிருந்து உண்மையைப் பகுத்தறிவது மிக முக்கியமானது. அப்போஸ்தலன் பவுலின் நாட்களில் பெரேயாவின் மக்கள் அவருடைய வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, தேவனுடைய வார்த்தையோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தனர். அவர் பேசியதையெல்லாம் அவர்கள் கண்மூடித்தனமாய் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் உண்மையைக் கற்றுக்கொண்டு அதைப் பின்பற்றுவதில் நேரத்தைச் செலவிட்டனர். # நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதில் நேரத்தைச் செலவிடுகிறீர்களா, அதைப் புரிந்து கொள்ள ஆழமாய்த் தியானிக்கிறீர்களா?# பரிசுத்த ஆவியானவரே உங்களுக்குள் இருக்கும் மேலான போதகர். நீங்கள் அவருக்குச் செவிசாய்த்தால், அவர் உங்களை எல்லா உண்மைகளிலும் வழிநடத்துவார்.# போதகர்களைக் குருட்டாட்டமாய்ப் பின்பற்றாதீர்கள்.# அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், ஆனால் அவர்களின் வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைக்கு முரணானதா இல்லையா என்று ஆராய்ந்து, அவை சரியாக இருந்தால் மட்டும் பின்பற்றுங்கள். # மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், தேவனுக்குப் பயப்படுங்கள்.# உங்கள் தவறுகளுக்கு, போதகர்கள் உட்பட யாரையும் குறை சொல்ல முடியாது.# உங்கள் வாழ்க்கைக்கும் செயல்களுக்கும் நீங்கள்தான் பொறுப்பு.# ஆகவே, உண்மையைப் புரிந்துகொண்டு பின்பற்றத் தேவனின் பகுத்தறிவை நாடுவது பாதுகாப்பானது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து உண்மை இன்னதென்று வேறுபடுத்திப் பார்க்கவும், அதைப் பின்பற்றவும் எனக்குப் பகுத்தறிவைத் தாரும். ஆமென்.