சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ என் ஊழியக்காரன். ஏசாயா 41:9 (TIRV) தேவனின் பிரதிநிதியாக, உங்கள் எஜமானரின் சேனையில் பணியாற்ற நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். இயேசு பூமியில் பணியாளின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார், இப்போது நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவருக்குச் சேவை செய்வது ஒரு பாக்கியம் அல்லவா? இது உலகில் மிகவும் விலையேறப்பெற்ற பணியாகும். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவருடைய வல்லமையையும் பலத்தையும் அவர் உங்களுக்கு தருகிறார். எதிரியின் மீது உங்களுக்கு அதிகாரத்தை தந்து, சத்துருவின் திட்டங்களை வெல்ல, அவரது கிருபையையும் பரிபூரண ஞானத்தையும் பொழிந்தருளுகிறார். பூமியில் நீங்கள் எதைக் கட்டுவீர்களோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது, தேவன் உங்கள் வார்த்தைகளை அங்கீகரித்து ஜனங்களை விடுவிக்கிறார். நீங்கள் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவராய் இருக்க அழைக்கப்படுகிறீர்கள்; எதுவும் உங்களைச் சேதப்படுத்த முடியாது. அவருடைய சாட்சியாய் இருப்பதற்கும் அவருடைய மகிமையையும் கிருபையையும் பிரதிபலிக்கும்படியும் பரிசுத்த ஆவியினால் அவர் உங்களைப் பலப்படுத்துவார். உண்மையுள்ள ஊழியராய் அங்கீகரிக்கப்படுவதற்கு, பெலனைப் பெற்று நேர்மையாய் அவருக்குச் சேவை செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் முழு இருதயத்தோடு உமக்குச் சேவை செய்யவும், இறுதிவரை உண்மையாய் இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீங்கள் தேவனின் ஊழியக்காரர்
“சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ என் ஊழியக்காரன். ஏசாயா 41:9 (TIRV) தேவனின் பிரதிநிதியாக, உங்கள் எஜமானரின் சேனையில் பணியாற்ற நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். இயேசு பூமியில் பணியாளின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார், இப்போது நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவருக்குச் சேவை செய்வது ஒரு பாக்கியம் அல்லவா? இது உலகில் மிகவும் விலையேறப்பெற்ற பணியாகும். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவருடைய வல்லமையையும் பலத்தையும் அவர் உங்களுக்கு தருகிறார். எதிரியின் மீது உங்களுக்கு அதிகாரத்தை தந்து, சத்துருவின் திட்டங்களை வெல்ல, அவரது கிருபையையும் பரிபூரண ஞானத்தையும் பொழிந்தருளுகிறார். பூமியில் நீங்கள் எதைக் கட்டுவீர்களோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது, தேவன் உங்கள் வார்த்தைகளை அங்கீகரித்து ஜனங்களை விடுவிக்கிறார். நீங்கள் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவராய் இருக்க அழைக்கப்படுகிறீர்கள்; எதுவும் உங்களைச் சேதப்படுத்த முடியாது. அவருடைய சாட்சியாய் இருப்பதற்கும் அவருடைய மகிமையையும் கிருபையையும் பிரதிபலிக்கும்படியும் பரிசுத்த ஆவியினால் அவர் உங்களைப் பலப்படுத்துவார். உண்மையுள்ள ஊழியராய் அங்கீகரிக்கப்படுவதற்கு, பெலனைப் பெற்று நேர்மையாய் அவருக்குச் சேவை செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் முழு இருதயத்தோடு உமக்குச் சேவை செய்யவும், இறுதிவரை உண்மையாய் இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

