புதன்கிழமை, 22 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான் 1 இராஜாக்கள் 18:21 தீர்க்கமாய் இருத்தல் ஒருவரது மனவுறுதியின் அளவைப் பிரதிபலிக்கிறது. தன்னம்பிக்கையின்மை, தவறான முடிவெடுக்கும் பயம், அதிகமாகச் சிந்தித்தல் மற்றும் சூழ்நிலைகளை மிகையாகப் பகுப்பாய்வு செய்யும் போக்கு என்பவையெல்லாம் சேர்ந்து தீர்க்கமின்மை உருவாகிறது. தீர்க்க மனத்திற்கு நேர்மாறானது, தேர்வுகள் செய்வதில் உள்ள சிரமம், முடிவுகள் எடுப்பதற்கும், செயலைத் தொடங்குவதற்கும் இருக்கும் போராட்டம், உறுதியின்மை, மற்றும் தள்ளிப்போடுதல் ஆகும். இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த மூதாதையரான மோசே, தீர்க்கமான சக்திக்கு ஒரு சான்றாக நிற்கிறார். துவக்கத்தில் அவரிடத்தில் தயக்கம் இருந்தபோதிலும், மோசே தேவனுடைய அழைப்பை ஏற்று, தமது ஜனங்களைச் சுதந்திரத்தை நோக்கி வழிநடத்துவதில் அசைக்க முடியா உறுதியை வெளிப்படுத்தினார். பார்வோனை எதிர்கொள்வது மற்றும் இஸ்ரவேலர்களை வனாந்தரத்தில் வழிநடத்துவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்கும் அவரது திறமை, சரித்திரத்தின் போக்கை மாற்றி ஒரு முழு தேசத்தின் தலைவிதியை நிர்ணியித்தது. # நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளைப் பற்றித் தெளிவாயிருங்கள், உடன்படுவதற்கு முன் நன்மைகள் மற்றும் தீமைகள்பற்றி விசாரிக்கத் தயங்க வேண்டாம்.# பணியைப் பற்றிப் புரிந்து கொள்வதில் தேவனுடைய வழிகாட்டுதலை நாடுங்கள்.# நீங்கள் உறுதியளித்தபின், தொடங்குவதைத் தள்ளிப் போடாதீர்கள். # உங்கள் சொந்தப் புரிதலைச் சார்ந்திருக்காமல், தேவனுடைய வழிகாட்டுதல், ஞானம், கிருபை, தயவு மற்றும் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான அவரது பலத்தைச் சார்ந்திருங்கள்# தேவன்மீது நம்பிக்கை வைத்து உங்களால் முடிந்ததில் சிறந்ததைக் கொடுங்கள்.# மற்றவர்களின் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்து, இலக்கில் கவனம் செலுத்துங்கள்.# நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த உலகில் நான் சாதிக்க வேண்டிய எல்லாவற்றிலும் தீர்க்கமானவராகவும் வெற்றிகரமான நபராகவும் இருக்க எனக்கு உதவும். ஆமென்.
விடாமுயற்சியுள்ள கைகள் செல்வத்தைக் கொண்டு வரும்.
“புதன்கிழமை, 22 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான் 1 இராஜாக்கள் 18:21 தீர்க்கமாய் இருத்தல் ஒருவரது மனவுறுதியின் அளவைப் பிரதிபலிக்கிறது. தன்னம்பிக்கையின்மை, தவறான முடிவெடுக்கும் பயம், அதிகமாகச் சிந்தித்தல் மற்றும் சூழ்நிலைகளை மிகையாகப் பகுப்பாய்வு செய்யும் போக்கு என்பவையெல்லாம் சேர்ந்து தீர்க்கமின்மை உருவாகிறது. தீர்க்க மனத்திற்கு நேர்மாறானது, தேர்வுகள் செய்வதில் உள்ள சிரமம், முடிவுகள் எடுப்பதற்கும், செயலைத் தொடங்குவதற்கும் இருக்கும் போராட்டம், உறுதியின்மை, மற்றும் தள்ளிப்போடுதல் ஆகும். இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த மூதாதையரான மோசே, தீர்க்கமான சக்திக்கு ஒரு சான்றாக நிற்கிறார். துவக்கத்தில் அவரிடத்தில் தயக்கம் இருந்தபோதிலும், மோசே தேவனுடைய அழைப்பை ஏற்று, தமது ஜனங்களைச் சுதந்திரத்தை நோக்கி வழிநடத்துவதில் அசைக்க முடியா உறுதியை வெளிப்படுத்தினார். பார்வோனை எதிர்கொள்வது மற்றும் இஸ்ரவேலர்களை வனாந்தரத்தில் வழிநடத்துவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்கும் அவரது திறமை, சரித்திரத்தின் போக்கை மாற்றி ஒரு முழு தேசத்தின் தலைவிதியை நிர்ணியித்தது. # நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளைப் பற்றித் தெளிவாயிருங்கள், உடன்படுவதற்கு முன் நன்மைகள் மற்றும் தீமைகள்பற்றி விசாரிக்கத் தயங்க வேண்டாம்.# பணியைப் பற்றிப் புரிந்து கொள்வதில் தேவனுடைய வழிகாட்டுதலை நாடுங்கள்.# நீங்கள் உறுதியளித்தபின், தொடங்குவதைத் தள்ளிப் போடாதீர்கள். # உங்கள் சொந்தப் புரிதலைச் சார்ந்திருக்காமல், தேவனுடைய வழிகாட்டுதல், ஞானம், கிருபை, தயவு மற்றும் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான அவரது பலத்தைச் சார்ந்திருங்கள்# தேவன்மீது நம்பிக்கை வைத்து உங்களால் முடிந்ததில் சிறந்ததைக் கொடுங்கள்.# மற்றவர்களின் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்து, இலக்கில் கவனம் செலுத்துங்கள்.# நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த உலகில் நான் சாதிக்க வேண்டிய எல்லாவற்றிலும் தீர்க்கமானவராகவும் வெற்றிகரமான நபராகவும் இருக்க எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

