← செய்திகளுக்குத் திரும்பு
ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர் வாழ்க்கைக்கான வழியைக் காட்டுகிறார்கள்
படத்தைப் பதிவிறக்கு

ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர் வாழ்க்கைக்கான வழியைக்...

“சனிக்கிழமை, 25 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டிப்பை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். நீதிமொழிகள் 10:17 ஒழுக்கமாயிருப்பதென்பது வண்ணமயமான காரியமல்ல. இது, நமது வழிகெட்ட, இயல்பான அல்லது கவலையற்ற வாழ்க்கையை கட்டுக்குள் வைக்கிறது. ஒழுக்கம் சில நேரங்களில் வேதனையாயிருக்கிறது. ஆனாலும், நியாயத் தீர்ப்பினின்று தப்பிக்கொள்ள ஒழுங்குள்ள வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வேதம் வலியுறுத்துகிறது. நாம், வீழ்ச்சியுற்ற பெற்றோரின் சந்ததியாயிருப்பதால், நமது பாவ சுபாவத்தினிமித்தம் தவறுகள் மற்றும் பாவங்கள் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாம் கட்டுப்படுத்தாமல் மேம்போக்காய் விட்டுவிட்டால், நமது பாவசுபாவம் நம்மைப் பாவத்திலும் இருளிலும் வாழவைக்க விரும்புகிறது. எனவே, நமது பாவ சுபாவத்தைப் பட்டினி போடுவதும், நம் மாம்சத்தைச் சிலுவையில் அறைவதும், உள்ளான மனிதனுக்கு சகலவிதமான தெய்வபக்தியும் ஆன்மீக ஊட்டமுமளிக்கும் உணவையும் ஊட்டுவதும் மிகவும் அவசியம். இந்த முழுச் செயல்முறையும் நம்மை நாமே ஒழுங்குபடுத்துவதாகும். ஒவ்வொரு அடியிலும் நம்மை வழிநடத்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார், நம்மைத் தேவசாயலாய் மாற்றுகிறார். # பரிசுத்த ஆவியின் சிட்சைக்குச் செவிசாய்த்தால், சத்துருவின் கண்ணிகளிலிருந்து தப்பித்து, பாவத்தின் சோதனைகளை வெல்லலாம்.# ஒழுக்கமான வாழ்க்கை, பரிசுத்தத்திலும் கடவுளுக்குப் பிரியமான ஜீவியத்திலும் நடக்க நமக்கு உதவும்.# தேவனின் சிட்சையை வெறுக்காதீர்கள். வாழ்க்கையில் ஒழுக்கமாயிருப்பதன் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்காதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் நன்றாக ஒழுக்கமாயிருக்கவும், உமக்குப் பிரியமான வாழ்க்கையை வாழவும் எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 25 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டிப்பை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். நீதிமொழிகள் 10:17 ஒழுக்கமாயிருப்பதென்பது வண்ணமயமான காரியமல்ல. இது, நமது வழிகெட்ட, இயல்பான அல்லது கவலையற்ற வாழ்க்கையை கட்டுக்குள் வைக்கிறது. ஒழுக்கம் சில நேரங்களில் வேதனையாயிருக்கிறது. ஆனாலும், நியாயத் தீர்ப்பினின்று தப்பிக்கொள்ள ஒழுங்குள்ள வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வேதம் வலியுறுத்துகிறது. நாம், வீழ்ச்சியுற்ற பெற்றோரின் சந்ததியாயிருப்பதால், நமது பாவ சுபாவத்தினிமித்தம் தவறுகள் மற்றும் பாவங்கள் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாம் கட்டுப்படுத்தாமல் மேம்போக்காய் விட்டுவிட்டால், நமது பாவசுபாவம் நம்மைப் பாவத்திலும் இருளிலும் வாழவைக்க விரும்புகிறது. எனவே, நமது பாவ சுபாவத்தைப் பட்டினி போடுவதும், நம் மாம்சத்தைச் சிலுவையில் அறைவதும், உள்ளான மனிதனுக்கு சகலவிதமான தெய்வபக்தியும் ஆன்மீக ஊட்டமுமளிக்கும் உணவையும் ஊட்டுவதும் மிகவும் அவசியம். இந்த முழுச் செயல்முறையும் நம்மை நாமே ஒழுங்குபடுத்துவதாகும். ஒவ்வொரு அடியிலும் நம்மை வழிநடத்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார், நம்மைத் தேவசாயலாய் மாற்றுகிறார். # பரிசுத்த ஆவியின் சிட்சைக்குச் செவிசாய்த்தால், சத்துருவின் கண்ணிகளிலிருந்து தப்பித்து, பாவத்தின் சோதனைகளை வெல்லலாம்.# ஒழுக்கமான வாழ்க்கை, பரிசுத்தத்திலும் கடவுளுக்குப் பிரியமான ஜீவியத்திலும் நடக்க நமக்கு உதவும்.# தேவனின் சிட்சையை வெறுக்காதீர்கள். வாழ்க்கையில் ஒழுக்கமாயிருப்பதன் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்காதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் நன்றாக ஒழுக்கமாயிருக்கவும், உமக்குப் பிரியமான வாழ்க்கையை வாழவும் எனக்கு உதவும். ஆமென்.