ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உமது கை என்னை நடத்தும், உமது வலது கரம் என்னைப் பிடிக்கும். சங்கீதம் 139:10. வாழ்க்கையின் சவால்களால்திங்கட்கிழமை, 12 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 34:18 பல்வேறு தோல்விகளின் காரணமாக நீங்கள் மனம் உடைந்து உணர்ச்சிவசப்பட்டுக் காணப்படுகிறீர்களா? தோல்விகளும், கஷ்டங்களும் மிகவும் வேதனையானவை என்றாலும் அவை இந்த உலகில் உங்கள் முடிவு அல்ல. நீங்கள் இன்னும் இயேசுவில் நம்பிக்கையைக் கண்டடையலாம். அவர் உங்கள் இரட்சகர். அவர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார். இயேசு எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார். இந்தச் சவாலான காலங்களில் அவரால் உங்களுக்கு வழிகாட்ட முடியும். அவரே உங்கள் ஆறுதல் மற்றும் பலத்தின் ஆதாரம். உங்கள் மனவேதனைகள் ஒவ்வொன்றையும் அவர் புரிந்துகொள்வதால் உங்களையும், உங்கள் கவலைகளையும் அவருடைய பராமரிப்புக்கு ஒப்படைத்து விடுங்கள். அமைதியாய் இருங்கள், இயேசு உங்களுக்காகக் கிரியைச் செய்யட்டும். அவர் உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் துக்கத்தை மகிழ்ச்சியாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் உடைந்த இருதயத்தைக் குணப்படுத்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தருளும். ஆமென்.நீங்கள் தொலைந்து போனதுபோல் உணருகிறீர்களா? உங்களுக்கு நம்பகமான வழிகாட்டுதலும் ஆதரவும் தேவையா? இயேசுவைத் தவிர வேறு எதையும் நீங்கள் பார்க்க வேண்டாம். அவரை நம்புங்கள். வாழ்க்கையின் குழப்பத்தின் மத்தியிலும் இக்கட்டுகளின் மத்தியிலும் உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள். அவர் உங்கள் அருகிலிருந்து ஒருபொழுதும் விலகாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல உங்களுக்கு உதவிச் செய்வார். இயேசுவையும் அவருடைய உபதேசங்களையும் பின்பற்றுவதன் மூலம், அமைதியையும் நோக்கத்தையும் உங்கள் வாழ்வில் நீங்கள் கண்டுகொள்வீர்கள். வாழ்க்கையில் தலையெடுக்கும் கஷ்டங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் அவரில் நீங்கள் கண்டடைவிர்கள். பெலன் கொண்டு எழும்பி எதிர்த்து நிற்கும் வலிமையுடையவராய் மாறுவீர்கள். ஜெபத்தில் அவரை அணுகவும் அவருடைய வழிகாட்டுதலைக் கேட்கவும் தயங்காதீர்கள். அவர் எப்பொழுதும் உங்களுக்கு செவிசாய்க்கவும், உங்களைச் சரியான திசையில் வழிநடத்தவும் தயாராயிருக்கிறார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் கையைப் பிடித்துச் சரியான பாதையில் என்னை வழிநடத்தும். உம்மை நம்பி உமது வழிமுறைகளைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். ஆமென்.
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து,...
“சங்கீதம் 34:18 பல்வேறு தோல்விகளின் காரணமாக நீங்கள் மனம் உடைந்து உணர்ச்சிவசப்பட்டுக் காணப்படுகிறீர்களா? தோல்விகளும், கஷ்டங்களும் மிகவும் வேதனையானவை என்றாலும் அவை இந்த உலகில் உங்கள் முடிவு அல்ல. நீங்கள் இன்னும் இயேசுவில் நம்பிக்கையைக் கண்டடையலாம். அவர் உங்கள் இரட்சகர். அவர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார். இயேசு எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார். இந்தச் சவாலான காலங்களில் அவரால் உங்களுக்கு வழிகாட்ட முடியும். அவரே உங்கள் ஆறுதல் மற்றும் பலத்தின் ஆதாரம். உங்கள் மனவேதனைகள் ஒவ்வொன்றையும் அவர் புரிந்துகொள்வதால் உங்களையும், உங்கள் கவலைகளையும் அவருடைய பராமரிப்புக்கு ஒப்படைத்து விடுங்கள். அமைதியாய் இருங்கள், இயேசு உங்களுக்காகக் கிரியைச் செய்யட்டும். அவர் உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் துக்கத்தை மகிழ்ச்சியாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் உடைந்த இருதயத்தைக் குணப்படுத்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தருளும். ஆமென்.நீங்கள் தொலைந்து போனதுபோல் உணருகிறீர்களா? உங்களுக்கு நம்பகமான வழிகாட்டுதலும் ஆதரவும் தேவையா? இயேசுவைத் தவிர வேறு எதையும் நீங்கள் பார்க்க வேண்டாம். அவரை நம்புங்கள். வாழ்க்கையின் குழப்பத்தின் மத்தியிலும் இக்கட்டுகளின் மத்தியிலும் உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள். அவர் உங்கள் அருகிலிருந்து ஒருபொழுதும் விலகாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல உங்களுக்கு உதவிச் செய்வார். இயேசுவையும் அவருடைய உபதேசங்களையும் பின்பற்றுவதன் மூலம், அமைதியையும் நோக்கத்தையும் உங்கள் வாழ்வில் நீங்கள் கண்டுகொள்வீர்கள். வாழ்க்கையில் தலையெடுக்கும் கஷ்டங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் அவரில் நீங்கள் கண்டடைவிர்கள். பெலன் கொண்டு எழும்பி எதிர்த்து நிற்கும் வலிமையுடையவராய் மாறுவீர்கள். ஜெபத்தில் அவரை அணுகவும் அவருடைய வழிகாட்டுதலைக் கேட்கவும் தயங்காதீர்கள். அவர் எப்பொழுதும் உங்களுக்கு செவிசாய்க்கவும், உங்களைச் சரியான திசையில் வழிநடத்தவும் தயாராயிருக்கிறார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் கையைப் பிடித்துச் சரியான பாதையில் என்னை வழிநடத்தும். உம்மை நம்பி உமது வழிமுறைகளைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

