ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உமது கை என்னை நடத்தும், உமது வலது கரம் என்னைப் பிடிக்கும். சங்கீதம் 139:10. வாழ்க்கையின் சவால்களால் நீங்கள் தொலைந்து போனதுபோல் உணருகிறீர்களா? உங்களுக்கு நம்பகமான வழிகாட்டுதலும் ஆதரவும் தேவையா? இயேசுவைத் தவிர வேறு எதையும் நீங்கள் பார்க்க வேண்டாம். அவரை நம்புங்கள். வாழ்க்கையின் குழப்பத்தின் மத்தியிலும் இக்கட்டுகளின் மத்தியிலும் உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள். அவர் உங்கள் அருகிலிருந்து ஒருபொழுதும் விலகாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல உங்களுக்கு உதவிச் செய்வார். இயேசுவையும் அவருடைய உபதேசங்களையும் பின்பற்றுவதன் மூலம், அமைதியையும் நோக்கத்தையும் உங்கள் வாழ்வில் நீங்கள் கண்டுகொள்வீர்கள். வாழ்க்கையில் தலையெடுக்கும் கஷ்டங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் அவரில் நீங்கள் கண்டடைவிர்கள். பெலன் கொண்டு எழும்பி எதிர்த்து நிற்கும் வலிமையுடையவராய் மாறுவீர்கள். ஜெபத்தில் அவரை அணுகவும் அவருடைய வழிகாட்டுதலைக் கேட்கவும் தயங்காதீர்கள். அவர் எப்பொழுதும் உங்களுக்கு செவிசாய்க்கவும், உங்களைச் சரியான திசையில் வழிநடத்தவும் தயாராயிருக்கிறார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் கையைப் பிடித்துச் சரியான பாதையில் என்னை வழிநடத்தும். உம்மை நம்பி உமது வழிமுறைகளைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். ஆமென்.
தேவனின் கரம் உங்களைப் பிடித்து வழிநடத்தும்.
“ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உமது கை என்னை நடத்தும், உமது வலது கரம் என்னைப் பிடிக்கும். சங்கீதம் 139:10. வாழ்க்கையின் சவால்களால் நீங்கள் தொலைந்து போனதுபோல் உணருகிறீர்களா? உங்களுக்கு நம்பகமான வழிகாட்டுதலும் ஆதரவும் தேவையா? இயேசுவைத் தவிர வேறு எதையும் நீங்கள் பார்க்க வேண்டாம். அவரை நம்புங்கள். வாழ்க்கையின் குழப்பத்தின் மத்தியிலும் இக்கட்டுகளின் மத்தியிலும் உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள். அவர் உங்கள் அருகிலிருந்து ஒருபொழுதும் விலகாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல உங்களுக்கு உதவிச் செய்வார். இயேசுவையும் அவருடைய உபதேசங்களையும் பின்பற்றுவதன் மூலம், அமைதியையும் நோக்கத்தையும் உங்கள் வாழ்வில் நீங்கள் கண்டுகொள்வீர்கள். வாழ்க்கையில் தலையெடுக்கும் கஷ்டங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் அவரில் நீங்கள் கண்டடைவிர்கள். பெலன் கொண்டு எழும்பி எதிர்த்து நிற்கும் வலிமையுடையவராய் மாறுவீர்கள். ஜெபத்தில் அவரை அணுகவும் அவருடைய வழிகாட்டுதலைக் கேட்கவும் தயங்காதீர்கள். அவர் எப்பொழுதும் உங்களுக்கு செவிசாய்க்கவும், உங்களைச் சரியான திசையில் வழிநடத்தவும் தயாராயிருக்கிறார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் கையைப் பிடித்துச் சரியான பாதையில் என்னை வழிநடத்தும். உம்மை நம்பி உமது வழிமுறைகளைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

