திங்கட்கிழமை, 19 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். சங்கீதம் 121:5 அன்பு தேவ பிள்ளையே, * வாழ்க்கையின் சவால்களைக் கடந்து செல்லும்போது, தனிமை அல்லது பயம் போன்ற உணர்வுகளை நீங்கள் எப்பொழுதாவது அனுபவித்திருக்கிறீர்களா?* உங்கள் பாதுகாப்பைக் குறித்த கவலைகளினித்தமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ அல்லது பயணங்களை மேற்கொள்வதற்கோ தயங்குகிறீர்களா? * இக்கட்டான காலகட்டங்ககளில் இப்படி உணர்வது இயல்புதான். ஆனால் இந்தப் போராட்டங்களை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை.* தேவனுடைய பிள்ளையாகிய உங்களுடன் இயேசு எப்பொழுதுமிருக்கிறார், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதும் உங்களைக் கவனித்துக்கொள்கிறார் என்ற நிச்சயம் உங்களுக்கு உள்ளது. * இயேசுவே மேலான பாதுகாவலர். அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பு நிபந்தனையற்றது.* நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களைப் பின்தொடரும் நிழலைப் போன்றவர், உங்களைச் சேதமில்லாமல் பாதுகாத்து, ஆபத்தினின்று உங்களைக் காப்பாற்றுகிறார்.* உங்களைச் சுற்றியுள்ளவர்களால் உதவ முடியாவிட்டாலும், உங்களுக்கு உதவ இயேசு எப்பொழுதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். * எனவே, எப்பொழுதும் உங்கள் பக்கத்திலேயே இருக்கும் உண்மையும் அன்பும் நிறைந்த பாதுகாவலர் உங்களுக்கு உண்டென்பதை அறிந்து, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய அசைக்க முடியாத பாதுகாப்பிற்கும், அன்பிற்கும் நன்றிசெலுத்துகிறேன். நீர் எப்பொழுதும் என்னுடன் இருப்பதையறிந்து, வாழ்க்கையின் சவால்களை பலத்தோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்
“திங்கட்கிழமை, 19 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். சங்கீதம் 121:5 அன்பு தேவ பிள்ளையே, * வாழ்க்கையின் சவால்களைக் கடந்து செல்லும்போது, தனிமை அல்லது பயம் போன்ற உணர்வுகளை நீங்கள் எப்பொழுதாவது அனுபவித்திருக்கிறீர்களா?* உங்கள் பாதுகாப்பைக் குறித்த கவலைகளினித்தமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ அல்லது பயணங்களை மேற்கொள்வதற்கோ தயங்குகிறீர்களா? * இக்கட்டான காலகட்டங்ககளில் இப்படி உணர்வது இயல்புதான். ஆனால் இந்தப் போராட்டங்களை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை.* தேவனுடைய பிள்ளையாகிய உங்களுடன் இயேசு எப்பொழுதுமிருக்கிறார், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதும் உங்களைக் கவனித்துக்கொள்கிறார் என்ற நிச்சயம் உங்களுக்கு உள்ளது. * இயேசுவே மேலான பாதுகாவலர். அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பு நிபந்தனையற்றது.* நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களைப் பின்தொடரும் நிழலைப் போன்றவர், உங்களைச் சேதமில்லாமல் பாதுகாத்து, ஆபத்தினின்று உங்களைக் காப்பாற்றுகிறார்.* உங்களைச் சுற்றியுள்ளவர்களால் உதவ முடியாவிட்டாலும், உங்களுக்கு உதவ இயேசு எப்பொழுதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். * எனவே, எப்பொழுதும் உங்கள் பக்கத்திலேயே இருக்கும் உண்மையும் அன்பும் நிறைந்த பாதுகாவலர் உங்களுக்கு உண்டென்பதை அறிந்து, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய அசைக்க முடியாத பாதுகாப்பிற்கும், அன்பிற்கும் நன்றிசெலுத்துகிறேன். நீர் எப்பொழுதும் என்னுடன் இருப்பதையறிந்து, வாழ்க்கையின் சவால்களை பலத்தோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

