செவ்வாய், 8 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஏசாயா 58:11நீங்கள் வாழ்வில் வறட்சியை அனுபவிக்கிறீர்களா?நீங்கள் ஆன்மீக ரீதியில் வறண்டுபோய், சோர்வாக உணருகிறீர்களா? வருத்தப்பட வேண்டாம். நீங்கள் புதுப்பிக்கப்படப்போகிற நேரம் நெருங்கி விட்டது. தொடர்ந்து தேவனுக்கு உண்மையாயிருங்கள். அவர் உங்களை நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக்குவார். நீங்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடனும், கனியுள்ள வாழ்வுடனும் செழித்து, மிகுந்த பலனைத் தருவீர்கள். தேவன் உங்கள் ஆத்துமாவுக்கு உணவளித்து, உங்கள் பலத்தைப் பெருகப்பண்ணுவார். மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தக்கதாய்த் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அவருடைய அன்பு உங்களுக்கு ஊட்டமளிக்கும். அந்த அன்பை நீங்கள் பிறரிடம் பிரதிபலிப்பீர்கள். உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்க்கையில் உள்ள வறட்சியை நீக்கி, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாய் மாற்றும். ஆமென்.
நீங்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போல் இருப்பீர்கள்
“செவ்வாய், 8 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஏசாயா 58:11நீங்கள் வாழ்வில் வறட்சியை அனுபவிக்கிறீர்களா?நீங்கள் ஆன்மீக ரீதியில் வறண்டுபோய், சோர்வாக உணருகிறீர்களா? வருத்தப்பட வேண்டாம். நீங்கள் புதுப்பிக்கப்படப்போகிற நேரம் நெருங்கி விட்டது. தொடர்ந்து தேவனுக்கு உண்மையாயிருங்கள். அவர் உங்களை நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக்குவார். நீங்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடனும், கனியுள்ள வாழ்வுடனும் செழித்து, மிகுந்த பலனைத் தருவீர்கள். தேவன் உங்கள் ஆத்துமாவுக்கு உணவளித்து, உங்கள் பலத்தைப் பெருகப்பண்ணுவார். மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தக்கதாய்த் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அவருடைய அன்பு உங்களுக்கு ஊட்டமளிக்கும். அந்த அன்பை நீங்கள் பிறரிடம் பிரதிபலிப்பீர்கள். உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்க்கையில் உள்ள வறட்சியை நீக்கி, மற்றவர்களுக்கு என்னை ஆசீர்வாதமாய் மாற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

