செவ்வாய், 2 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். எபிரெயர் 8:10 அன்புள்ள தேவ பிள்ளையே, நீங்கள் தனிமையாய் உணர்கிறீர்களா? அவமதிக்கப்பட்டு பிறரால் நிராகரிக்கப்படுகிறீர்களா?உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் காரணமாய் உங்கள் சகக் குழுவில் அல்லது சுற்றுப்புறத்தில் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளீர்களா? வேதனைப்பட வேண்டாம். தொடர்ந்து தேவனுக்கு உண்மையாய் இருங்கள். உங்கள் அசைக்க முடியாப் பக்தி அவருடைய மகிமைக்கு சான்றாயிருக்கும். நீங்கள் அவருடைய வழிகளில் நடக்கும்போது, உங்கள் மூலம் வெளிப்படும் சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் பிறர் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் கண்களை நித்தியத்தின் மீது நிலைநிறுத்துங்கள், தற்காலிகமானவற்றிலல்ல. அவருடைய திட்டத்தை நம்புங்கள், ஏனென்றால் உங்கள் கற்பனையைக் காட்டிலும் அவருடையத் திட்டம் மேலானது. உங்கள் உத்தமம் உரிய காலத்தில் பலனைத் தரும். மேலும், நீங்கள் தேவ ஜனமாய் இருப்பதன் மகத்துவத்தை உலகம் காணும். பலங்கொண்டு திடமனதாயிருங்கள். தேவ அன்பையும் சுபாவத்தையும் உலகின் மற்ற பகுதிகளுக்குத் தொடர்ந்து பரப்புங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமக்குச் சொந்தமாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. உமது மகிமை என் வாழ்வில் காணப்படட்டும். ஆமென்.
நீங்கள் தேவஜனமாய் இருப்பீர்கள்.
“செவ்வாய், 2 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். எபிரெயர் 8:10 அன்புள்ள தேவ பிள்ளையே, நீங்கள் தனிமையாய் உணர்கிறீர்களா? அவமதிக்கப்பட்டு பிறரால் நிராகரிக்கப்படுகிறீர்களா?உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் காரணமாய் உங்கள் சகக் குழுவில் அல்லது சுற்றுப்புறத்தில் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளீர்களா? வேதனைப்பட வேண்டாம். தொடர்ந்து தேவனுக்கு உண்மையாய் இருங்கள். உங்கள் அசைக்க முடியாப் பக்தி அவருடைய மகிமைக்கு சான்றாயிருக்கும். நீங்கள் அவருடைய வழிகளில் நடக்கும்போது, உங்கள் மூலம் வெளிப்படும் சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் பிறர் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் கண்களை நித்தியத்தின் மீது நிலைநிறுத்துங்கள், தற்காலிகமானவற்றிலல்ல. அவருடைய திட்டத்தை நம்புங்கள், ஏனென்றால் உங்கள் கற்பனையைக் காட்டிலும் அவருடையத் திட்டம் மேலானது. உங்கள் உத்தமம் உரிய காலத்தில் பலனைத் தரும். மேலும், நீங்கள் தேவ ஜனமாய் இருப்பதன் மகத்துவத்தை உலகம் காணும். பலங்கொண்டு திடமனதாயிருங்கள். தேவ அன்பையும் சுபாவத்தையும் உலகின் மற்ற பகுதிகளுக்குத் தொடர்ந்து பரப்புங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமக்குச் சொந்தமாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. உமது மகிமை என் வாழ்வில் காணப்படட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

