செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசாயா 62:3 கிரீடம் என்பது மரியாதையைக் குறிக்கிறது. இது உங்களின் ராஜரீகத்தையும் தேவன் கொடுத்த அதிகாரத்தையும் காட்டுகிறது. வேத்ததின்படி, ஓட்டப்பந்தயத்தில் உள்ள ஒவ்வொரு வீரரும் நித்திய கிரீடத்தைப் பெறக் கடுமையான ஒழுக்கத்திற்கு உட்படுகிறார்கள். வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம். வெற்றிப்பெற, பயிற்சி, போஷாக்கு, ஓய்வு மற்றும் நீதியுள்ள வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய முயற்சி தேவை. நேற்றைய நாளைவிடச் சிறந்த மனிதராய் மாற, இலக்கை நோக்கி உங்கள் பார்வையை அமைத்து, நல்ல உணவு, ஓய்வு மற்றும் ஒழுக்கமான செயல்பாடுகளுடன் தினமும் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நேர்மையுடன் வாழ்ந்து, உங்கள் காரியங்களில் உண்மையாயிருங்கள். வெற்றி என்பது இடைவிடாச் சிறந்த முயற்சியின் மூலம் நீங்கள் யாராய் மாறுகிறீர்கள் என்பதைப் பற்றியது. அத்தகைய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உங்கள் வாழ்க்கைக்கான தேவ நோக்கத்தை நிறைவேற்ற உதவும். மேலும் நீங்கள் கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமாய் இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இலக்கில் கவனம் செலுத்தவும், உமது கரங்களில் அலங்காரமான கிரீடமாயிருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீங்கள் கர்த்தருடைய கரத்தில் அலங்காரமான கிரீடமாய் இருப்பீர்கள்.
“செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசாயா 62:3 கிரீடம் என்பது மரியாதையைக் குறிக்கிறது. இது உங்களின் ராஜரீகத்தையும் தேவன் கொடுத்த அதிகாரத்தையும் காட்டுகிறது. வேத்ததின்படி, ஓட்டப்பந்தயத்தில் உள்ள ஒவ்வொரு வீரரும் நித்திய கிரீடத்தைப் பெறக் கடுமையான ஒழுக்கத்திற்கு உட்படுகிறார்கள். வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம். வெற்றிப்பெற, பயிற்சி, போஷாக்கு, ஓய்வு மற்றும் நீதியுள்ள வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய முயற்சி தேவை. நேற்றைய நாளைவிடச் சிறந்த மனிதராய் மாற, இலக்கை நோக்கி உங்கள் பார்வையை அமைத்து, நல்ல உணவு, ஓய்வு மற்றும் ஒழுக்கமான செயல்பாடுகளுடன் தினமும் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நேர்மையுடன் வாழ்ந்து, உங்கள் காரியங்களில் உண்மையாயிருங்கள். வெற்றி என்பது இடைவிடாச் சிறந்த முயற்சியின் மூலம் நீங்கள் யாராய் மாறுகிறீர்கள் என்பதைப் பற்றியது. அத்தகைய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உங்கள் வாழ்க்கைக்கான தேவ நோக்கத்தை நிறைவேற்ற உதவும். மேலும் நீங்கள் கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமாய் இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இலக்கில் கவனம் செலுத்தவும், உமது கரங்களில் அலங்காரமான கிரீடமாயிருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

