வியாழன், 14 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும். சங்கீதம் 26:11 # யாரும் கவனிக்காவிட்டாலும், ஒருவர் தமக்கும் தேவனுக்கும் முன்பு நேர்மையாகவும் நம்பகமானவராகவும் இருப்பதே உத்தமம். # யாரும் உங்களைக் கண்காணிக்காதபோதும் நீங்கள் தனியாக இருக்கும்போதும், நீங்கள் தேவனுக்கு முன்பாக உத்தமமாய் இருந்து அவருடைய வழிகளைப் பின்பற்றுவதே உங்கள் நேர்மையின் அளவைக் காட்டுகிறது. இன்று, நம்மில் பெரும்பாலோர் வாழ்க்கையில் இரட்டை வேடமிட்டுக்கொண்டிருக்கிறோம். மக்கள் மத்தியிலும் தனிப்பட்ட முறையிலும் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது நமது உண்மையான ஆளுமையை வெளிப்படுத்துகிறது. சக மனிதர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் முன்னால் நாம் தேவதூதர்போல் தோன்றலாம். இருப்பினும், நம் வீடுகளிலோ அல்லது குடும்பங்களிலோ நாம் விரும்பத்தகாதவர்களாகவும் அன்பற்றவர்களாகவும் இருந்தால், அது நம்மிடம் உண்மையில்லாததைக் காட்டுகிறது. பொதுவிடத்தில் உண்மையாக இருப்பது பற்றி நாம் பேசலாம். இருப்பினும், நமது பண விஷயத்தில்லோ அல்லது மற்றவர்களுடனான நமது உறவுகள் குறித்தோ நம் துணைவி அல்லது பெற்றோரிடம் நேர்மையாய் இல்லாவிட்டால், நாம் உத்தமமானவர்கள் அல்ல என்பதையே அது காட்டுகிறது. # உங்கள் முதலாளியின் முன்னிலையிலும், நீங்கள் தனியாக இருக்கும்போதும் உங்கள் பணியிட நடத்தையைப் பகுப்பாய்வு செய்யுங்கள்.# நீங்கள் இரண்டு நிகழ்வுகளிலும் ஒரே மாதிரியாய் இருந்தால் நலம். இல்லையெனில், உங்கள் நேர்மையைக் குறித்து நீங்கள் ஆய்ந்தறிய வேண்டும். # வீட்டிலோ, பொது வெளியிலோ சட்டத்தையோ, விதிகளையோ, ஒழுங்குமுறைகளையோ செயல்படுத்த, யாரும் இல்லாதபோது, நீங்கள் தொடர்ந்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டால் அது நலமானது. இல்லையென்றால், உங்கள் நேர்மையை நீங்கள் கேள்விக்குள்ளாக்க வேண்டும். # உத்தமமாய் நடவுங்கள்.# அந்த விதத்தில் நீங்கள் இயேசுவைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைக் காட்டலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நேர்மையானதொரு நபராயிருக்க எனக்கு உதவும். ஆமென்.
நேர்மையாய் நடவுங்கள்
“வியாழன், 14 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும். சங்கீதம் 26:11 # யாரும் கவனிக்காவிட்டாலும், ஒருவர் தமக்கும் தேவனுக்கும் முன்பு நேர்மையாகவும் நம்பகமானவராகவும் இருப்பதே உத்தமம். # யாரும் உங்களைக் கண்காணிக்காதபோதும் நீங்கள் தனியாக இருக்கும்போதும், நீங்கள் தேவனுக்கு முன்பாக உத்தமமாய் இருந்து அவருடைய வழிகளைப் பின்பற்றுவதே உங்கள் நேர்மையின் அளவைக் காட்டுகிறது. இன்று, நம்மில் பெரும்பாலோர் வாழ்க்கையில் இரட்டை வேடமிட்டுக்கொண்டிருக்கிறோம். மக்கள் மத்தியிலும் தனிப்பட்ட முறையிலும் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது நமது உண்மையான ஆளுமையை வெளிப்படுத்துகிறது. சக மனிதர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் முன்னால் நாம் தேவதூதர்போல் தோன்றலாம். இருப்பினும், நம் வீடுகளிலோ அல்லது குடும்பங்களிலோ நாம் விரும்பத்தகாதவர்களாகவும் அன்பற்றவர்களாகவும் இருந்தால், அது நம்மிடம் உண்மையில்லாததைக் காட்டுகிறது. பொதுவிடத்தில் உண்மையாக இருப்பது பற்றி நாம் பேசலாம். இருப்பினும், நமது பண விஷயத்தில்லோ அல்லது மற்றவர்களுடனான நமது உறவுகள் குறித்தோ நம் துணைவி அல்லது பெற்றோரிடம் நேர்மையாய் இல்லாவிட்டால், நாம் உத்தமமானவர்கள் அல்ல என்பதையே அது காட்டுகிறது. # உங்கள் முதலாளியின் முன்னிலையிலும், நீங்கள் தனியாக இருக்கும்போதும் உங்கள் பணியிட நடத்தையைப் பகுப்பாய்வு செய்யுங்கள்.# நீங்கள் இரண்டு நிகழ்வுகளிலும் ஒரே மாதிரியாய் இருந்தால் நலம். இல்லையெனில், உங்கள் நேர்மையைக் குறித்து நீங்கள் ஆய்ந்தறிய வேண்டும். # வீட்டிலோ, பொது வெளியிலோ சட்டத்தையோ, விதிகளையோ, ஒழுங்குமுறைகளையோ செயல்படுத்த, யாரும் இல்லாதபோது, நீங்கள் தொடர்ந்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டால் அது நலமானது. இல்லையென்றால், உங்கள் நேர்மையை நீங்கள் கேள்விக்குள்ளாக்க வேண்டும். # உத்தமமாய் நடவுங்கள்.# அந்த விதத்தில் நீங்கள் இயேசுவைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைக் காட்டலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நேர்மையானதொரு நபராயிருக்க எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

