← செய்திகளுக்குத் திரும்பு
நன்றியுடன் இருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நன்றியுடன் இருங்கள்.

“ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 1 தீமோத்தேயு 1:12 நன்றியுணர்வு என்பது உறவுகளை வலுவாக்கும் ஒரு முக்கியமான உணர்வு. நன்றியறிதலுள்ளவர்களாய் இருங்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, தங்களது நெருக்கடிகளின்போது தங்களுக்கு உதவிய அல்லது உறுதுணையாயிருந்த மற்ற மக்களுக்கு நன்றியில்லாத அல்லது நன்றிமறந்த நபர்களையே பெரும்பாலும் நாம் சந்திக்கிறோம். வேதத்தில், இயேசுவால் குணமாக்கப்பட்ட பத்து குஷ்டரோகிகளைப் பற்றி நாம் படிக்கலாம். இருப்பினும், பத்துப் பேரில் ஒருவன் மட்டுமே இயேசுவிடம் திரும்பி வந்து, அவரால் பெற்ற அற்புத சுகத்திற்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்த நன்றியற்ற ஒன்பதுபேர் மீது இயேசு தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இதுதான் இன்று பெரும்பாலானோரின் நிலை. அவர்கள், தங்கள் நன்மைகளை மறந்துவிடுகிறார்கள். அல்லது, தொடர்ந்து தவறுகளைக் கண்டுபிடித்துத் தங்களுக்கு உதவியவர்களைப் பற்றி புகார் செய்கிறார்கள். 1. வாழ்க்கையில் நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்?2. உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உங்களிடம் காட்டும் அன்புக்கும் அக்கறைக்கும் நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்? # வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இருக்கும்.# வாழ்க்கையில் நாம் விரும்புவதையெல்லாம் நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைப்பதில்லை. சில தாமதங்கள் ஏற்படலாம்.# தேவன் அதினதின் காலத்தில் சகலத்தையும் நேர்த்தியாய் அழகாய்ச் செய்கிறார் என்று பரிசுத்த வேதாகமத்தில் மற்றொரு வசனம் கூறுகிறது.# ஆகையால், நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் முறுமுறுக்காதீர்கள்.# மாறாக, இதுவரை நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை எண்ணி, தேவனுக்கும் உங்களை ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றியுள்ளோராய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நன்றியுள்ள நபராய் இருக்க எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 1 தீமோத்தேயு 1:12 நன்றியுணர்வு என்பது உறவுகளை வலுவாக்கும் ஒரு முக்கியமான உணர்வு. நன்றியறிதலுள்ளவர்களாய் இருங்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, தங்களது நெருக்கடிகளின்போது தங்களுக்கு உதவிய அல்லது உறுதுணையாயிருந்த மற்ற மக்களுக்கு நன்றியில்லாத அல்லது நன்றிமறந்த நபர்களையே பெரும்பாலும் நாம் சந்திக்கிறோம். வேதத்தில், இயேசுவால் குணமாக்கப்பட்ட பத்து குஷ்டரோகிகளைப் பற்றி நாம் படிக்கலாம். இருப்பினும், பத்துப் பேரில் ஒருவன் மட்டுமே இயேசுவிடம் திரும்பி வந்து, அவரால் பெற்ற அற்புத சுகத்திற்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்த நன்றியற்ற ஒன்பதுபேர் மீது இயேசு தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இதுதான் இன்று பெரும்பாலானோரின் நிலை. அவர்கள், தங்கள் நன்மைகளை மறந்துவிடுகிறார்கள். அல்லது, தொடர்ந்து தவறுகளைக் கண்டுபிடித்துத் தங்களுக்கு உதவியவர்களைப் பற்றி புகார் செய்கிறார்கள். 1. வாழ்க்கையில் நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்?2. உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உங்களிடம் காட்டும் அன்புக்கும் அக்கறைக்கும் நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்? # வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இருக்கும்.# வாழ்க்கையில் நாம் விரும்புவதையெல்லாம் நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைப்பதில்லை. சில தாமதங்கள் ஏற்படலாம்.# தேவன் அதினதின் காலத்தில் சகலத்தையும் நேர்த்தியாய் அழகாய்ச் செய்கிறார் என்று பரிசுத்த வேதாகமத்தில் மற்றொரு வசனம் கூறுகிறது.# ஆகையால், நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் முறுமுறுக்காதீர்கள்.# மாறாக, இதுவரை நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை எண்ணி, தேவனுக்கும் உங்களை ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றியுள்ளோராய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நன்றியுள்ள நபராய் இருக்க எனக்கு உதவும். ஆமென்.