← செய்திகளுக்குத் திரும்பு
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களைத் தேவன் ஆசிர்வதிப்பார்; அவர்கள் திருப்தியடைவார்கள்
படத்தைப் பதிவிறக்கு

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களைத் தேவன் ஆசிர்வதிப்பார்;...

“புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். மத்தேயு 5:6 - இன்றைய சூழலில், நீதி அதிர்ச்சிக்குரிய விதத்தில் குறைந்து வருகிறது.- சாதனையைத் தொடர்வதில், தனிநபர்கள் அநியாயமானதும் நெறிமுறையற்றதுமான வழிகளைப் பயன்படுத்திப் பிறர்மேல் ஆதிக்கம் செலுத்த முயற்சித்துத் தங்கள் தவறுகளையும் நியாயப்படுத்தப் பிரயாசப்படுகிறார்கள்.- சராசரியான குடிமக்களுக்கு நீதி உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. - எனினும், நம் தேவன் நீதியுள்ள நீதிபதியாய் இருக்கிறார்.- நீதியின்மேல் பசிதாகம் கொண்ட அனைவரையும் திருப்தியடையச் செய்ய அவர் ஆயத்தமாயிருக்கிறார்.- உங்களை நீதிமான்களாக்கச் சிலுவையில் அவர் மரித்தார். - நீதி என்பது தேவனுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள சரியான உறவைக் குறிக்கிறது.- இது, வாழ்வுக்கு வழிவகுக்கக்கூடிய, தேவனை மையமாகக் கொண்டதோர் பண்பாகும். - எனவே, நீங்கள் நீதியின் மேல் பசி, தாகம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.- நீதியைத் தேடும் ஜனங்களில் தேவன் மகிழ்ச்சியடைகிறார்.- அவர், உங்களை நீதியும் நியாயமுமுள்ளதோர் நபராய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை நீதியுள்ள மனிதனாய் மாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். மத்தேயு 5:6 - இன்றைய சூழலில், நீதி அதிர்ச்சிக்குரிய விதத்தில் குறைந்து வருகிறது.- சாதனையைத் தொடர்வதில், தனிநபர்கள் அநியாயமானதும் நெறிமுறையற்றதுமான வழிகளைப் பயன்படுத்திப் பிறர்மேல் ஆதிக்கம் செலுத்த முயற்சித்துத் தங்கள் தவறுகளையும் நியாயப்படுத்தப் பிரயாசப்படுகிறார்கள்.- சராசரியான குடிமக்களுக்கு நீதி உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. - எனினும், நம் தேவன் நீதியுள்ள நீதிபதியாய் இருக்கிறார்.- நீதியின்மேல் பசிதாகம் கொண்ட அனைவரையும் திருப்தியடையச் செய்ய அவர் ஆயத்தமாயிருக்கிறார்.- உங்களை நீதிமான்களாக்கச் சிலுவையில் அவர் மரித்தார். - நீதி என்பது தேவனுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள சரியான உறவைக் குறிக்கிறது.- இது, வாழ்வுக்கு வழிவகுக்கக்கூடிய, தேவனை மையமாகக் கொண்டதோர் பண்பாகும். - எனவே, நீங்கள் நீதியின் மேல் பசி, தாகம் உடையவர்களாய் இருக்க வேண்டும்.- நீதியைத் தேடும் ஜனங்களில் தேவன் மகிழ்ச்சியடைகிறார்.- அவர், உங்களை நீதியும் நியாயமுமுள்ளதோர் நபராய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை நீதியுள்ள மனிதனாய் மாற்றும். ஆமென்.