செவ்வாய், 3 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். பிலிப்பியர் 3:21 இவை பவுலின் உறுதியளிக்கும் வார்த்தைகள்:இன்று இப்படிப்பட்ட உறுதியும் நம்பிக்கையும் நமக்கிருக்கிறதா?மறுமை வாழ்வைப் பற்றி இன்னும் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?இந்த உலக வாழ்க்கை குறுகியது. ஏனெனில், நாம் நித்திய வாழ்வுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.தேவ பிள்ளைகள் எல்லாருடைய வலியும் துக்கங்களும் இவ்வுலகத்துடன் முடிவடையும்.ஆகையால், திடன்கொள்ளுங்கள்! தம்மோடிருக்க நம்மை அழைத்துச் செல்ல இயேசு சீக்கிரம் வருகிறார்.அவர் நம் கண்ணீர் யாவையும் துடைத்து, நம் வேதனைகளை நீக்கிடுவார்.நாம் நமது அழிவுக்குரிய சரீரங்களிலிருந்து மகிமையான சரீரங்களைப் பெற்றுக்கொண்டு மறுரூபமாவோம்.அது என்ன ஒரு அற்புதமான தருணமாயிருக்கும்!நம் இரட்சகரைச் சந்திக்க நாம் ஆயத்தமாவோமாக. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நித்திய ஜீவனுக்கேதுவாய் உம்மைச் சந்திக்கத் தயாராக எனக்கு உதவி செய்யும்.
அழிவிலிருந்து மகிமைக்கு
“செவ்வாய், 3 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். பிலிப்பியர் 3:21 இவை பவுலின் உறுதியளிக்கும் வார்த்தைகள்:இன்று இப்படிப்பட்ட உறுதியும் நம்பிக்கையும் நமக்கிருக்கிறதா?மறுமை வாழ்வைப் பற்றி இன்னும் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?இந்த உலக வாழ்க்கை குறுகியது. ஏனெனில், நாம் நித்திய வாழ்வுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.தேவ பிள்ளைகள் எல்லாருடைய வலியும் துக்கங்களும் இவ்வுலகத்துடன் முடிவடையும்.ஆகையால், திடன்கொள்ளுங்கள்! தம்மோடிருக்க நம்மை அழைத்துச் செல்ல இயேசு சீக்கிரம் வருகிறார்.அவர் நம் கண்ணீர் யாவையும் துடைத்து, நம் வேதனைகளை நீக்கிடுவார்.நாம் நமது அழிவுக்குரிய சரீரங்களிலிருந்து மகிமையான சரீரங்களைப் பெற்றுக்கொண்டு மறுரூபமாவோம்.அது என்ன ஒரு அற்புதமான தருணமாயிருக்கும்!நம் இரட்சகரைச் சந்திக்க நாம் ஆயத்தமாவோமாக. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நித்திய ஜீவனுக்கேதுவாய் உம்மைச் சந்திக்கத் தயாராக எனக்கு உதவி செய்யும்”
நம்பிக்கையின் வார்த்தை

